Friday, July 10, 2009

காசி அல்வா


தேவையானவை:
1.பூசணிக்காய் 1 (முற்றியது)
2.சர்க்கரை 1 1/2 கிலோ
3.தண்ணீர் 4 டம்ளர்
4.நெய் 1 ஸ்பூன்
5.திராட்சை,முந்திரி,பாதாம் சிறிதளவு
6.ஏலப்பொடி,ஜாதிக்காய் பொடி சிறிதளவு

செய்முறை:

பூசணிக்காயை தேங்காய் துருவியில் துருவி நான்கு டம்ளர் தண்ணீர் சேர்த்து
வேகவைககவும்.பின்னர் வெள்ளைத்துணியில் வடிக்கட்டி பிழிந்தெடுக்கவேண்டும்.
2 கிலோ என்பது 1 1/2 கிலோவாக ஆகியிருக்கும்.

அதனுடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைக்கவேண்டும்.நன்றாக கிளறவேண்டும்.
சர்க்கரை பாகாக உருகி மொத்தமாக இறுகி அல்வா மாதிரி வரும்.

வாணலியில் நெய் வைத்து திராட்சை,உடைத்த முந்திரி,பாதாம் வறுத்து அல்வாவில்
போட்டு கடைசியாக ஏல்ப்பொடி,ஜாதிக்காய் பொடி சேர்க்கவேண்டும்.

5 comments:

சகாதேவன் said...

ரொம்ப நாளுக்கு முன்னால் திருநெல்வேலி மாருதி விலாஸ் ஹோட்டலில் குறிப்பிட்ட கிழமைகளில் காசி அல்வா உண்டு. எனக்கு பிடிக்கும். இப்போ ஹோட்டலில் எல்லாம் செய்வதில்லை. என் மகள் கல்யாணத்தில் ஒரு மெனுவில் சேர்த்தேன். வித்தியாசமாக நல்ல ஸ்வீட் போட்டிருக்கிறாயே என்று பாராட்டினார்கள்.
சகாதேவன்

தமயந்தி said...

யாருப்பா இந்த சகாதேவன் அண்ணாச்சி.. எங்க ஊர் காரரா இருக்கார்?

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி
சகாதேவன்
தமயந்தி

GEETHA ACHAL said...

எனக்கு மிகவும் பிடித்த அல்வா....மிகவும் அருமையோ அருமை...

அன்புடன்,கீதா ஆச்சல்
http://geethaachalrecipe.blogspot.com/

Kanchana Radhakrishnan said...

நன்றி கீதா

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...