Wednesday, December 30, 2009

தேங்காய் பால் குருமா


தேவையானவை:

தேங்காய் பால் 2 கப்
உருளைக்கிழங்கு 2
சின்ன வெங்காயம் 10
காரட் 2
தக்காளி 2
தண்ணீர் 1/4 கப்

அரைக்க:

தேங்காய் துருவியது 2 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கடலை 1/4 கப்
முந்திரிபருப்பு 10
பச்சைமிளகாய் 2
கசகசா 1 டீஸ்பூன்

தாளிக்க:

பட்டை,லவங்கம்,சோம்பு எல்லாம் சிறிதளவு.

செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோலுரித்துக்கொள்ளவும்.
காரட்,தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கக்ிகொள்ளவும்.
அரைக்கக்கொடுத்துள்ள பொருட்களை விழுது போல அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்கவேண்டிய பொருட்களை வறுக்கவும்.
பின்னர் சின்ன வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
அதனுடன் நறுக்கிய உருளைக்கிழங்கு,காரட்,தக்காளி,தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
அரைத்த விழுதுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
கடைசியாக தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

இந்த குருமா இட்லி,தோசை,சப்பாத்தி ஆகியவற்றிற்கு சிறந்த side dish.

9 comments:

Unknown said...

இந்த குருமா ரொம்ப ஈசியாக இருக்கே செய்து பார்க்கிறேன்,
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

சூர்யா ௧ண்ணன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி
Mrs.Faizakader
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி சூர்யா ௧ண்ணன்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

suvaiyaana suvai said...

It looks mouth watering!!!! Happy New Year

T.V.ராதாகிருஷ்ணன் said...
This comment has been removed by the author.
பித்தனின் வாக்கு said...

ரொம்ப நல்லா இருக்குங்க. சப்பாத்தி அல்லது சுக்கா ரொட்டி அல்லது பட்டர்நான் கூட இருந்தா சூப்பரா இருக்கும். நன்றி.

Kanchana Radhakrishnan said...

Thanks suvaiyaana suvai
Happy New Year

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி பித்தனின் வாக்கு
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...