தேவையானவை:
பேபி கார்ன் 10
வெங்காயம் 1
தக்காளி 2
உருளைக்கிழங்கு 1
முட்டைக்கோஸ் 1/2 கப் (நறுக்கியது)
பீன்ஸ் 1/2 கப் (நறுக்கியது
காரட் 2
குடமிளகாய் 1
----
மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்
தனியாதூள் 1 டீஸ்பூன்
காரப்பொடி 1 டீஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது 1 டீஸ்பூன்
வேர்கடலை பொடி 1 டேபீள்ஸ்பூன்
எலுமிச்சம்பழம் 1
-----
தாளிக்க:
கடுகு 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் 2
பட்டை 1 துண்டு
கிராம்பு 4
சோம்பு 1 டீஸ்பூன்
----
செய்முறை:
பேபிகார்னை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
வெங்காயம்,தக்காளி,உருளைக்கிழங்கு,காரட்,குடமிளகாய் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
கடாயில் எண்ணைய் வைத்து தாளிக்கக் கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.பிறகு சிறிது மஞ்சள்தூள் சேர்த்து நறுக்கிய பேபிகார்னை வதக்கவும்.
பேபிகார்ன் சிறிது வெந்ததும் நறுக்கிய தக்காளி,உருளைக்கிழங்கு,முட்டைக்கோஸ்,பீன்ஸ்,காரட்,குடமிளகாய் எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும்.
உப்பு சேர்த்து அதனுடன் தனியாதூள்,காரப்பொடி,இஞ்சி பூண்டு விழுது,சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
இறக்கியபின் வேர்க்கடலை பொடியை தூவவும்.
கொஞ்சம் ஆறிய பிறகு எலுமிச்சம்பழம் பிழியலாம்.
பேபிகார்ன் மசாலா சப்பாத்தி,பூரிக்கு சிறந்த sidedish.
8 comments:
entha recipe roombha nalla irukku..will try soon..
மிகவும் அருமையாக இருக்கின்றது...எனக்கு பேபி கார்ன் என்றால் மிகவும் பிடிக்கும்...
வருகைக்கு நன்றி Nithu Bala
வருகைக்கு நன்றி Geetha Achal
ரொம்ப அருமையாக இருக்கு...
வருகைக்கு நன்றி Menaga
ரொம்ப அருமை
வருகைக்கு நன்றி Prabhadamu
Post a Comment