Thursday, December 2, 2010

கோதுமை மாவு பிஸ்கட்

தேவையானவை: 

கோதுமை மாவு 1 கப்

பொடித்த சர்க்கரை 1/2 கப்

வெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்

ஏலக்காய் தூள் 1/2 டீஸ்பூன்

பேக்கிங் சோடா 1/2 டீஸ்பூன்

எண்ணைய் தேவையானது



செய்முறை:


ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில்

கோதுமை மாவு,சர்க்கரை,வெண்ணைய்,பேக்கிங் சோடா,ஏலக்காய் தூள் எல்லாவற்றையும்

சேர்த்து சப்பாத்திக்கு மாவு பிசைவது போல பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி இடுவது போல இட்டு

பின்னர் சிறு சிறு சதுரங்களாக வெட்டிக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணைய் வைத்து காய்ந்ததும் வெட்டி வைத்துள்ள சதுரங்களை பொறித்து எடுக்கவும்.

குழந்தைகளுக்கு இதனை மாலை சிற்றுண்டியாகக் கொடுத்தால்

விரும்பி சாப்பிடுவார்கள்.   மாலை டிபன்

6 comments:

ப.கந்தசாமி said...

நல்ல சிற்றுண்டி. சாப்பிட்டிருக்கிறேன்.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி DrPKandaswamyPhD.

Asiya Omar said...

இது மாதிரி மைதா மாவில் செய்வேன்.அருமை.

Menaga Sathia said...

super tea time snacks...

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Menaga.

Jaleela Kamal said...

கோதுமை பிஸ்கேட் நல்ல இருக்கு காஞ்சனா, நானும் இதை மைதாவில் முட்டை சேர்த்து செய்வேன், இதே போல் கார பிஸ்கேட்டும் செய்வேன்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...