Tuesday, January 18, 2011

ரவா தோசை

தேவையானவை:
ரவா 1 கப்
இட்லி மாவு or
அரிசி மாவு 1 கப்
மைதா மாவு 1 கப்
மிளகு 10
சீரகம் 1 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் 3
இஞ்சி 1 துண்டு
கறிவேப்பிலை சிறிது
-------
செய்முறை:

ரவையை 1 1/2 கப் தண்ணீரில் அரை மணிநேரம் ஊறவைக்கவும்.
இட்லி மாவையும் மைதாமாவையும் தண்ணீரில் கரைத்து உப்பு சேர்க்கவும்.
ஊறவைத்த ரவாவை அதனுடன் கலந்து சற்று நீர்க்க கரைக்கவும்.
மிளகு,சீரகம்,கறிவேப்பிலை மூன்றையும் எண்ணையில் பொறித்து போடவும்.
பச்சைமிளகாய்,இஞ்சி இரண்டையும் பொடியாக நறுக்கி பச்சையாக போடவும்.
-------
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து கல் காய்ந்ததும் மாவை கரண்டியில் எடுத்து
அள்ளி தெளித்த மாதிரி லேசாக ஊற்றி இருபுறமும் எண்ணைய் விட்டு மொறு மொறு என்று வந்ததும் எடுக்கவும்.

இதற்கு சரியான side dish தக்காளி சட்னி,தேங்காய் சட்னி.

10 comments:

Menaga Sathia said...

தோசை நல்லா மொறுகலா சூப்பராயிருக்கு...

Asiya Omar said...

அருமை.பார்க்கவே சூப்பர்.

Reva said...

easy dosa...seithu paarthudanum...romba murugala irukku...super.
Reva

Priya Sreeram said...

pakka super a irukku

Kanchana Radhakrishnan said...

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மேனகா.

Kanchana Radhakrishnan said...

Thanks asiya omar.

Kanchana Radhakrishnan said...

செய்துபாருங்கள் Revathy.

Kanchana Radhakrishnan said...

Thanks Priya Sreeram.

GEETHA ACHAL said...

தோசை அருமையோ அருமை...

மிகவும் மொறுகலாக இருக்கின்றது...

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Geetha.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...