Monday, March 7, 2011

இன்று சர்வதேச மகளிர் தினம்





இன்று மகளிர்தின 100ஆவது ஆண்டு கொண்டாட்டம்.

1910ஆம் ஆண்டு டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் உழைக்கும் மகளிர் சர்வதேச மகாநாடு நடந்தது.இந்த மாநாட்டில் பங்கேற்ற பெண்கள், வேலைவாய்ப்பில் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த சர்வதேச மகளிர் தினம் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தை பிரதிபலித்தனர்.

இதை அடுத்து 1911ஆம் ஆண்டு ஆஸ்திரியா,டென்மார்க்,ஜெர்மனி மற்றும் ஸ்விட்சர்லாந்தில் சர்வதேச மகளிர்தினம் கொண்டாடப்பட்டது.அன்றுமுதல் ஒவ்வொரு ஆண்டும் மர்ச் 8ஆம் நாள் உலகம் முழுதும் மகளிர்தினம் கொண்டாடப்படுகிறது.இன்று 100ஆவது ஆண்டு மகளிர்தினம்.

இந்த ஆண்டு ,மகளிர் கவுரவமான வேலையில் சேர்வதற்கான பாதையை உருவாக்கும் வகையில் கல்வி,பயிற்சி,தொழில்நுட்பம் ஆகியவற்றில் மகளிர்க்கு சமவாய்ப்புத் தரவேண்டும் என்பதே குறிக்கோளாக உள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை, மகளிர் ஈடுபடாதத் துறையில்லை எனலாம்.

நம் நாட்டின் முதல் குடிமகன்(ள்) ஒரு பெண்

நம்நாட்டை ஆளும் கட்சியின் தலைவர் ஒரு பெண்

பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஒரு பெண்

பாராளுமன்ற சபாநாயகர் ஒரு பெண்

ரயில்வேயின் மத்திய அமைச்சர் ஒரு பெண்

உத்தரபிரதேச முதல்வர் ஒரு பெண்

தில்லியின் முதல்வர் ஒரு பெண்

தமிழத்தில் ஆளும் கட்சியாய் இருந்து இன்று எதிர்க்கட்சியாய் உள்ள கட்சியின் தலைவர் ஒரு பெண்

என எங்கெங்கு நோக்கினும் நம்மால் முடியும் என நிரூபித்து வருபவர்கள் பெண்கள்.

ஒருநாட்டில் பெண்கள் முன்னேறினால் அவரது குடும்பம் மட்டுமல்ல சமுதாயமே முன்னேறும் என்பதில் சந்தேகமில்லை.

அனைவருக்கும் மகளிர்தின வாழ்த்துகள்.

9 comments:

Asiya Omar said...

நல்ல பகிர்வு வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

மகளிர் தின வாழ்த்துக்கள் மேடம்.

//இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த சர்வதேச மகளிர் தினம் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தை பிரதிபலித்தனர்.//

ஒருவகையில் இந்தக் கொண்டாட்டம் மகளிருக்கு மறுக்கப்பட்ட உரிமைகளை அலசவும் ஆராயவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உதவவே செய்கிறது. பகிர்வுக்கு நன்றி.

ஆயிஷா said...

மகளிர் தின வாழ்த்துக்கள்.

ஹேமா said...

பெருமையாக உணர்ந்தாலும் இன்னும் ஆண்களிடமிருந்து வெளிப்படும் அடக்கும்தன்மை இன்னும் குறையவே இல்லை.அது எந்த நாடாக இருந்தாலும்.காரணம் எங்களின் மென்மையான மனமும் அன்புமே காரணம்.எங்கள் பலமும் பலஹீனமும் அதுவேயாகிறது !

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி asiya omar.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி .

Kanchana Radhakrishnan said...

// ஹேமா said...
பெருமையாக உணர்ந்தாலும் இன்னும் ஆண்களிடமிருந்து வெளிப்படும் அடக்கும்தன்மை இன்னும் குறையவே இல்லை.அது எந்த நாடாக இருந்தாலும்.காரணம் எங்களின் மென்மையான மனமும் அன்புமே காரணம்.எங்கள் பலமும் பலஹீனமும் அதுவேயாகிறது //

உண்மை தான்.
வருகைக்கு நன்றி ஹேமா.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி ஆயிஷா.

Pranavam Ravikumar said...

Good post.. Belated Women's Day Wishes!

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...