Tuesday, March 15, 2011

ஓலன்



தேவையானவை:

பூசணி கீற்று 2

காராமணி 1 கப்

பச்சைமிளகாய் 4

தேங்காய் பால் 1 கப்

தேங்காய் எண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்

கடுகு 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்

செய்முறை:


பூசணி கீற்றுகளை தோலெடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

காராமணியை லேசாக எண்ணையில்லாமல் வறுத்து ஒரு கப் தண்ணீரில் வேகவைக்கவும்

பச்சைமிளகாயை குறுக்கு வாட்டில் கீறிக்கொள்ளவும்.

------

அடுப்பில் ஒரு அகண்ட பாத்திரத்தை வைத்து அதில் நறுக்கிய பூசணித்துண்டுகள்,வேகவைத்த காராமணி,

பச்சைமிளகாய், ஒரு கப் தண்ணீர்,சேர்த்து வேகவைக்கவும்.

பூசணித்துண்டுகள் நன்றாக வெந்ததும் தேவையான உப்பு சேர்க்கவும்.

பின்னர் தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிடவும்.

கடைசியில் தேங்காய் எண்ணையில் கடுகு,உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டவும்.

------

ஓலனை சாதத்தோடு பிசைந்தும் சாப்பிடலாம்.

சப்பாத்தி,பூரிக்கும் சிறந்த side dish ஆகும். 

12 comments:

Menaga Sathia said...

சிம்பிளா நல்லாயிருக்கு!!

GEETHA ACHAL said...

வித்தியசமாக இருக்கின்றது...சூப்பராக இருக்கு...

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Menaga.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Geetha.

புவனேஸ்வரி ராமநாதன் said...

பூசணிக்காய் மிக நல்ல உணவு. அதில் புதுவிதமாக
ஒரு உணவு வகை செய்தது அருமை. நன்றி.

ஹேமா said...

எனக்குப் பிடிக்கல பூசணிக்காய் !

Kanchana Radhakrishnan said...

// புவனேஸ்வரி ராமநாதன் said...
பூசணிக்காய் மிக நல்ல உணவு. அதில் புதுவிதமாக
ஒரு உணவு வகை செய்தது அருமை. நன்றி.//

வருகைக்கு நன்றி.

Kanchana Radhakrishnan said...

ஹேமா said...
எனக்குப் பிடிக்கல பூசணிக்காய் !//

ஹேமாவுக்கு பூசணிக்காயேபிடிக்காதா.அல்லது இந்த ரெசிபி பிடிக்கவில்லையா.

Geetha6 said...

அருமை மேடம்.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Geetha6.

Malar Gandhi said...

Looks fantastic, perfect for lunch.

Kanchana Radhakrishnan said...

Thanks for coming Malar Gandhi

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...