தேவையானவை:
நார்த்தங்காய் 2
பச்சைமிளகாய் 8
புளி ஒரு எலுமிச்சை அளவு
மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்
பொடித்த வெல்லம் 1/2 கப்
உப்பு,எண்னைய் தேவையானது
-------
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
----
செய்முறை:
நார்த்தங்காய்,பச்சைமிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக்கொள்ளவும்.
---
வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து அதனுடன் பொடியாக நறுக்கிய நார்த்தங்காய்
,பச்சைமிளகாய் இரண்டையும் மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
நார்த்தங்காய் நன்றாக வெந்ததும் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
பின்னர் பொடித்த வெல்லத்தை சேர்க்கவும்.
வெல்லம் கரைந்து கெட்டியாக ஜாம் பதத்திற்கு வந்ததும் இறக்கவும்.
வெய்யிலுக்கு ஊறுகாய்க்கு பதிலாக இந்த பச்சடியை உபயோகிக்கலாம்
7 comments:
சமையல் குறிப்புகளுக்கு நன்றி..
see.,
http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_22.html
வருகைக்கு நன்றி வேடந்தாங்கல் - கருன்.
Super patchadi.... arumaiya irukku..
Reva
எனக்கு இங்கு செய்து பார்க்க வாய்ப்பு இல்லை.என்றாலும் நார்த்தங்காயில் புதுமையான சமையல் ஒன்று பார்க்கிறேன் !
தயிர் சாதத்துக்கு சூப்பர்ர் ஜோடி!!
வருகைக்கு நன்றி ஹேமா.
Post a Comment