Sunday, May 8, 2011

பாதாம் பக்கோடா

தேவையானவை:
பாதாம்பருப்பு 20
கடலைமாவு 1 கப்
அரிசிமாவு 1/4 கப்
மைதாமாவு 1 மேசைக்கரண்டி
------
இஞ்சி 1 துண்டு (பொடியாக நறுக்கியது)
மிளகாய்தூள் 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை 1 கொத்து
நெய் 1 மேசைக்கரண்டி
உப்பு,எண்ணைய் தேவையானது
------
செய்முறை:



பாதாம் பருப்பை அரைமணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து தோலுரித்து நன்றாக துடைக்கவும்.அடுப்பில் கடாயை வைத்து நெய் சேர்த்து காய்ந்ததும் பாதாம்பருப்பை ஒரு பிரட்டு பிரட்டவேண்டும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் கடலை மாவு,அரிசிமாவு,மைதாமாவு,பொடியாக நறுக்கிய இஞ்சி,மிளகாய் தூள்,கறிவேப்பிலை,வறுத்த பாதாம் பருப்பு தேவையான உப்பு எல்லாவற்றையும் சேர்த்து சிறித் தண்ணீர் தெளித்து பக்கோடா பதத்திற்கு பிசைய வேண்டும்.
வாணலியில் எண்ணைய் வைத்து நன்கு காய்ந்ததும் பிசைந்து வைத்த பாதாம் பக்கோடாவை தனித்தனி உருண்டைகளாக போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுக்கவேண்டும்.
பள்ளியில் இருந்து வரும் சிறுவர் சிறுமிகளுக்கு விருப்பமான மாலைநேர சிற்றுண்டியாகும்.

6 comments:

ஹேமா said...

எனக்கும் பக்கோடா நிறையவே பிடிக்கும்.பாதாம் கலந்து இன்னும் சுவையாகவே இருக்கும் !

Reva said...

Pakoda arumai.... superb:)
Reva

குடந்தை அன்புமணி said...

http://thagavalmalar. blogspot.com/ 2011/05/blog-post.html வாருங்கள்...இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.

Kanchana Radhakrishnan said...

varukaikku nanri Hema.

ராமலக்ஷ்மி said...

கடலை பக்கோடா போல பாதாமில். அருமையாய் இருக்குமே. செய்து பார்க்கிறேன். குறிப்புக்கு நன்றி மேடம்.

Menaga Sathia said...

பாதாம் சேர்த்து பகோடா செய்திருப்பது நல்லாயிருக்கு!!

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...