Monday, May 23, 2011

பனீர் மஷ்ரூம் மசாலா.....



தேவையானவை:

பனீர் துண்டுகள் 10

மஷ்ரூம் துண்டுகள் 10

குடமிளகாய் 1

வெங்காயம் 1

காரட் 2

மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்

மிளகு தூள் 1 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்

வெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்

உப்பு,எண்ணைய் தேவையானது

-------

பொடி பண்ண:

பட்டை ஒரு துண்டு

கிராம்பு 4

சோம்பு 1 டீஸ்பூன்

--------

செய்முறை:

மஷ்ரூமை தண்ணீரில் நன்றாக அலசி சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

கடாயில் சிறிது வெண்ணைய் சேர்த்து மஷ்ரூம் துண்டுகளை ஒரு பிரட்டு பிரட்டி தனியே எடுத்து வைக்கவும்.

பனீர் துண்டுகளை வென்னீரில் போட்டு எடுக்கவும்.

வெங்காயம்,காரட்,குடமிளகாய் மூன்றையும் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

பட்டை,சோம்பு,கிராம்பு மூன்றையும் எண்ணையில் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.

--------

ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணைய் ஊற்றி வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.

அதனுடன் காரட்,குடமிளகாய் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.

குடமிளகாய்,காரட் இரண்டும் சிறிது வெந்ததும் தேவையான உப்பு,மஞ்சளதூள்,மிளகு தூள்,இஞ்சி பூண்டு விழுது,

சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

பின்னர் மஷ்ரூம்,பனீர் அரைத்து வைத்துள்ள பொடி மூன்றையும் சேர்த்து மசாலா திக்காக வந்தவுடன் இறக்கி மீதமுள்ள வெண்ணையை சேர்க்கவும்.

பூரி,சப்பாத்திக்கு ஏற்றது.

4 comments:

ராமலக்ஷ்மி said...

அருமையான குறிப்பு. நன்றி மேடம்.

Kanchana Radhakrishnan said...

Thanks Ramalakshmi

Kanchana Radhakrishnan said...

Thanks Ramalakshmi

Kanchana Radhakrishnan said...

vsrukaikku nanri Menaga.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...