தேவையானவை:
வாழைத்தண்டு 1/2 அடி துண்டு ஒன்று
துவரம்பருப்பு 1/2 கப்
தக்காளி 2
பச்சைமிளகாய் 2
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை சிறிதளவு
------
பொடி பண்ண:
மிளகாய் வற்றல் 2
மிளகு 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
-------
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து
--------
செய்முறை:
வாழைத்தண்டை பொடியாக
நறுக்கிக்கொண்டு சிறிது தண்ணீர் மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் துவரம்பருப்போடு (இரண்டையும் தனித்தனி அடுக்கில்) வைத்து வேகவைக்கவும்.
மிளகாய் வற்றல்,மிளகு,சீரகம் மூன்றையும் சிறிது எண்ணையில்வறுத்து பொடி பண்ணிக்கொள்ளவும்.
தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பச்சைமிளகாயை நீட்ட வாக்கில் கீறிக்கொள்ளவும்.
------
குக்கரில் இருந்து எடுத்த வாழைத்தண்டை அதிலிருந்த தண்ணீருடன் மிக்சியில் நன்கு அரைத்து வடிகட்டவேண்டும்.
வெந்த துவரம்பருப்பை நன்றாக கடைந்துகொண்டு அதனுடன் வாழைத்தண்டு சாறு,தக்காளி,பச்சைமிளகாய்,அரைத்த பொடி,தேவையான உப்பு
எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கொதிக்கவைக்கவேண்டும்.
கடைசியில் கடுகு,பெருங்காயத்தூள்,கறிவேப்பிலை தாளித்து அரிந்த கொத்தமல்லித்தழையை சேர்க்கவும்
4 comments:
இது புதுசா இருக்கு எனக்கு.
வாழைத்தண்டு வறை அல்லது கறி சாப்பிட்டிருக்கிறேன் ஊரில்.இங்கு வாழைத்தண்டு கிடைக்காது !
Thanks Hema.
healthy option, looks great
Thanks Krishnaveni.
Post a Comment