Sunday, June 5, 2011

கொத்தவரை உசிலி

தேவையானவை:
கொத்தவரங்காய்2 கப் (பொடியாக நறுக்கியது)
துவரம்பருப்பு 1/2 கப்

கடலைப்பருப்பு 1/2 கப்

மிளகாய் வற்றல் 4

பெருங்காயம் 1 துண்டு

மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை சிறிதளவு

உப்பு,எண்ணைய் தேவையானது
---
தாளிக்க:

கடுகு,உளுத்தம்பருப்பு சிறிதளவு

செய்முறை:



கொத்தவரங்காயைபொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

துவரம்பருப்பு,கடலைபருப்பு,மிளகாய்வற்றல்,பெருங்காயம் நான்கையும் ஒரு மணிநேரம் தண்ணீரில்

ஊறவைத்து வடிகட்டி சிறிது உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.

அரைத்த விழுதை இட்லி தட்டில் வைத்து ஆவியில் 15 நிமிடம் வேகவைக்கவும்.

ஆவியில் வேகவைத்த பருப்புகளை நன்கு உதிர்க்கவும்.(மிக்சியில் ஒரு சுற்று சுற்றினால் உதிரியாக வரும்)

வாணலியில் எண்ணைய் வைத்து கடுகு,உளுத்தம்பருப்பு தாளித்து

கொத்தவரை ,கறிவேப்பிலை,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
கொத்தவரைவதங்கினவுடன் உதிர்த்த பருப்புகளை சேர்த்து சிறிது எண்ணைய் விட்டு நன்றாக கிளறவும்.
உதிரி உதிரியாக வரும்.

9 comments:

ரிஷபன் said...

உசிலி என்றாலே கூடுதல் டேஸ்ட் தான்.. பிடிக்காத காயைக் கூட ருசித்து சாப்பிட வைத்து விடும்.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி ரிஷபன்.

Reva said...

Veggie with dhal is always a lovely combo... I am not a big fan of this veggie but will try making this awesome dish..:)
Reva

ஹேமா said...

உசிலி...பெயரே புதுசா இருக்கு.சைவ உணவின் நேரம் சமைத்துப் பார்க்கிறேன் !

GEETHA ACHAL said...

சூப்பராக இருக்கு கஞ்சனா..ரொம்ப அருமை...

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி revathi.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Geetha.

Menaga Sathia said...

my fav usili,looks good!!!

Kanchana Radhakrishnan said...

Thanks Menaga.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...