.
தேவையானவை:
காரட் 1/4 கப்
பீன்ஸ் 1/4 கப்
உருளைக்கிழங்கு 1/4 கப்
பச்சைப் பட்டாணி 1/4கப்
பனீர் துண்டுகள் 10
முந்திரி 5
வெங்காயம் 2
தக்காளி 2
மஞ்சள் தூள்,மிளகாய் பொடி,தனியா பொடி,garam masala
ஒவ்வொன்றும் ஒரு டீஸ்பூன்.
தேங்காய் பால் 1 கப்
தயிர் or cream 1/2 கப்
எண்ணைய்,உப்பு தேவையானது.
பொடி செய்ய:
சோம்பு 1 டீஸ்பூன்
தனியா 1 டீஸ்பூன்
மிளகு 1 டீஸ்பூன்
பட்டை சிறு துண்டு
ஏலக்காய் 2
Paste பண்ண:
பச்சை மிளகாய் 4
இஞ்சி ஒரு துண்டு
பூண்டு 4
செய்முறை:
முதலில் பீன்ஸ்,காரட்,உருளைக்கிழங்கு மூன்றையும் பொடியாக நறுக்கி பச்சை பட்டாணியுடன் சேர்த்து வதக்கி நன்றாக வெந்தவுடன் தனியே எடுத்துவைக்கவும்.
பனீர் துண்டுகளை எண்ணையில் பொரித்து எடுக்கவும்.
பொடி செய்ய கொடுத்துள்ளவைகளை நன்றாக எண்ணையில் வறுத்து பொடி பண்ணவும்.
பச்சைமிளகாய்,இஞ்சி,பூண்டு மூன்றையும் விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் சிறிது எண்ணைய் விட்டு வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.வெங்காயம் நன்றாக வெந்ததும் நறுக்கிய தக்காளியைப்போட்டு
வதக்கவும்.பொடிபண்ணிய பவுடரையும்,paste யும் போட்டு சிறிது வதங்கிய வுடன் மஞ்சள்தூள்,மிளகாய் தூள்,தன்யா பொடி மூன்றையும் சேர்க்கவும்.இந்த கலவையில்
வெந்த காய்கறிகளையும் சிறிது தண்ணீரும்,உப்பும் சேர்த்து நன்றாகக்கலந்து கொதிக்கவக்கவும்.
தேங்காய்பால்,தயிர் இரண்டையும் சேர்த்து ஒரு நிமிடம் வைத்து இறக்கவும்.அடுப்பை அணைக்கும் முன் பனீர் துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறவும்.
கடைசியில் வறுத்த முந்திரியை சேர்க்கவும்.
13 comments:
வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி.
புதுசா இருக்கு எனக்கு.சைவச் சாப்பாட்டு நேரம் சமைத்துப் பார்க்கிறேன் !
வருகைக்கு நன்றி ஹேமா.
மன்னிக்கவும் என்னிடம் நவ்ரத்தன்மல் என்கிற மார்வாடி கடன் வாங்கிவிட்டு திருப்பிதராமல் மண்டையை காச்சிகிறான்,அவனை குருமா பண்ண முடியுமா?
//
vijayan said...
மன்னிக்கவும் என்னிடம் நவ்ரத்தன்மல் என்கிற மார்வாடி கடன் வாங்கிவிட்டு திருப்பிதராமல் மண்டையை காச்சிகிறான்,அவனை குருமா பண்ண முடியுமா? //
:))
ரொம்ப அருமை
உங்கள் எல்லா குறிப்புக்கும் ஓட்டு போட்டாச்சு
இந்த ரெஸிப்பியத்தான் தேடிட்டு இருந்தேன்.பகிர்வுக்குநன்றி.
வருகைக்கு நன்றி
Jaleela.
வருகைக்கு நன்றி
ஸாதிகா.
உங்களின் நவரத்ன குருமா சூப்பர்.
வருகைக்கு நன்றி Priyaram
வணக்கம்...
உங்களின் இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_23.html) சென்று பார்க்கவும்... நன்றி...
Post a Comment