தேவையானவை:
கடலைமாவு 2 கப்
அரிசிமாவு 1 கப்
காரப்பொடி 1 மேசைக்கரண்டி
மிளகுத்தூள் 1 தேக்கரண்டி
பெருங்காயம் 1 தேக்கரண்டி
வெண்ணைய் 1/4 கப்
உப்பு,எண்ணைய் தேவையானது
செய்முறை:
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் கடலைமாவு,அரிசிமாவு இரண்டையும் சேர்த்து கலக்கவேண்டும்.
உப்பையும் பெருங்காயத்தையும் சிறிது தண்ணீரில் கரைத்து மாவில் விடவேண்டும்.
அதனுடன் காரப்பொடி,மிளகு தூள்,வெண்ணைய் எல்லாவற்றையும் தேவையான தண்ணீருடன் சேர்த்து கெட்டியாக பிசையவேண்டும்.
வாணலியில் எண்ணைய் வைத்து காய்ந்த பின் தேன்குழல் படியில் நாடா வில்லையைப்போட்டு,சிறிது மாவை அதில் சேர்த்து எண்ணையில் பிழியவும்.
இரண்டு பக்கமும் நன்றாக வெந்ததும் எடுக்கவும்.
16 comments:
மிளகுத்தூள் போடலாமா? பரவாயில்லையே அது உடம்புக்கும் நல்லதாச்சே தீபாவளிக்கு செய்துடறேன் நன்றி
Wow!,healthy Ribbon pakoda luks crisp and good.Luv it Kanchan
poondu pidithavargalukkana other combination .karapodiyodu poondu vizhudhu serthu pisaiyalam.konjam vennai serthu pisainthal pattuthan
வருகைக்கு நன்றி MyKitchenFlavors-BonAppetite.
வருகைக்கு நன்றி Sakthi.
//ஷைலஜா said...
மிளகுத்தூள் போடலாமா? பரவாயில்லையே அது உடம்புக்கும் நல்லதாச்சே தீபாவளிக்கு செய்துடறேன் நன்றி//
நீண்ட நாட்களுக்குப்பின் வருகை புரிந்தமைக்கு நன்றி.
தேன்குழல் படியில் நாடா வில்லையைப்போட்டு...இது எனக்குச் செய்யச் சரிவராது !
why hema?thenkuzhal padi ippo press screw methodil kooda kidaikuthe!so simple! u can try
பார்க்கவே சூப்பர்..
//ஹேமா said...
தேன்குழல் படியில் நாடா வில்லையைப்போட்டு...இது எனக்குச் செய்யச் சரிவராது !//
தேன்குழல் அச்சு எல்லாக் கடைகளிலும் கிடைக்கிறது.உங்க ஊரில் கிடைக்காவிட்டால் சொல்லுங்கள் நான் வாங்கி அனுப்புகிறேன்.
வருகைக்கு நன்றி ஹேமா.
வருகைக்கு நன்றி asiya omar.
தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! குறிப்புக்கு நன்றி.
நன்றி ராமலக்ஷ்மி .இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
ரிப்பன் தேன் குழல்,ரிப்பன் முறுக்கு,நாடா,ரிப்பன் பக்கோடா இப்படி இதற்கு மட்டும் பல நாமகரணங்கள்.அழகாக செய்து காட்டி இருக்கீங்க சகோ காஞ்சனா
oalai pakoda endrum azhaikkapadum saathikaa!
Thank you.....nice
Post a Comment