Thursday, November 10, 2011

கறிவேப்பிலை பொடி




தேவையானவை:
கறிவேப்பிலை 1 கப் (ஆய்ந்தது)
மிளகாய்வற்றல் 4
உளுத்தம்பருப்பு 1 மேசைக்கரண்டி
கடலைபருப்பு 1 மேசைக்கரண்டி
பெருங்காயம் 1 துண்டு
புளி சி றி தளவு
உப்பு,எண்ணைய் தேவையானது

செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து ஆய்ந்து வைத்துள்ள கறிவேப்பிலையை போட்டு எண்ணைய் விடாமல் ஒரு பிரட்ட வேண்டும்.
ஈரமெல்லாம் போனவுடன் தனியே எடுத்து வைக்கவேண்டும்.
வாணலியில் சிறிது எண்ணைய் வைத்து மிளகாய் வற்றலை தனியே வறுத்து எடுக்கவேண்டும்.
அதே வாணலியில் கடலை பருப்பு,உளுத்தம்பருப்பு இரண்டையும் பொன்னிறமாக வறுக்கவேண்டும்.
பெருங்காயத்தை தனியே பொரித்து எடுக்கவேண்டும்
 கடைசியில் புளியையும் உப்பையும் ஒரு பிரட்டு பிரட்ட வேண்டும்.

மிக்சியில் முதலில் பருப்புகளையும்,மிளகாய்வற்றல், பெருங்காயம் புளி உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றி விட்டு கறிவேப்பிலையை சேர்த்து
பொடியாக அரைக்கவேண்டும்.
கறிவேப்பிலை பொடியை சாதத்தோடு சிறிது நல்லெண்ணைய் சேர்த்து சாப்பிடலாம்.
தயிர் சாதத்திற்கு ஊறுகாய்க்கு பதில் தொட்டுக்கொள்ளலாம்.

12 comments:

ஹேமா said...

நானும் அம்மா சொல்லி இதுமாதிரிச் செய்து வச்சிருக்கிறேன்.கனகாலம் பழுதுபடாமல் இருக்கு.நான் உள்ளிப் பௌடரும் சேர்த்திருக்கிறேன்.கறி வைக்க நேரமில்லாத அவசர நேரத்துக்கு உதவியா இருக்கு !

ராமலக்ஷ்மி said...

ஆம் ஹேமா சொன்னது போல சீக்கிரம் கெடுவதில்லை. அவசரத்துக்கும் உபயோகமாகும். ஆரோக்கியத்துக்கு உகந்ததும். நல்ல குறிப்புக்கு நன்றி.

Aruna Manikandan said...

Healthy delicious podi dear :)
Thx. for sharing..

உமா மோகன் said...

puli illamal yen paruppugal kooda illamal verum kariveppilai milagai uppu varuththum podikkalam. different taste.

ஸாதிகா said...

நான் தேடிக்கொண்டிருந்த ரெஸிப்பி

Unknown said...

அறிவியல்படி கருவேப்பிலை காய்ந்தாலும் அதிலுள்ள சத்துகள் அப்படியே இருக்குமாம்.சிலர் கொஞ்சம் மிளகும் சேர்த்து பொடி செய்கிறார்கள்.நல்ல குறிப்புக்கு நன்றி.

Kanchana Radhakrishnan said...

// ஹேமா said...
நானும் அம்மா சொல்லி இதுமாதிரிச் செய்து வச்சிருக்கிறேன்.கனகாலம் பழுதுபடாமல் இருக்கு.நான் உள்ளிப் பௌடரும் சேர்த்திருக்கிறேன்.கறி வைக்க நேரமில்லா//

நன்றி Hema.

Kanchana Radhakrishnan said...

ராமலக்ஷ்மி said...
ஆம் ஹேமா சொன்னது போல சீக்கிரம் கெடுவதில்லை. அவசரத்துக்கும் உபயோகமாகும். ஆரோக்கியத்துக்கு உகந்ததும். நல்ல குறிப்புக்கு நன்றி//

Thanks ராமலக்ஷ்மி.

Kanchana Radhakrishnan said...

Thanks for coming Aruna.

Kanchana Radhakrishnan said...

varukaikku nanri Sakthi.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி ஸாதிகா.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி ரா.செழியன்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...