Sunday, November 13, 2011

குடமிளகாய்..வெங்காயம்..பொரியல்




தேவையானவை:
பச்சை குடமிளகாய் 1
சிவப்பு குடமிளகாய் 1
மஞ்சள் குடமிளகாய் 1
வெங்காயம் 2
மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
பயத்தம் பருப்பு 1 மேசைக்கரண்டி
------
அரைக்க:
தேங்காய் துருவல் 1 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் 2
பொட்டுக்கடலை 1 மேசைக்க்கரண்டி
------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு1 தேக்கரண்டி
கறிவேப்பிலை  சிறிதளவு.
--------
செய்முறை:

மூன்று பச்சைமிளகாய்களையும்,வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
பயத்தம்பருப்பை பத்து நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை தண்ணீர் விடாமல் அரைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணைய் சேர்த்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
ஊறவைத்துள்ள பயத்தம்பருப்பை வடிகட்டி இதனுடன் சேர்த்து பிரட்டவும்..
பின்னர் நறுக்கி வைத்துள்ள மூன்று குடமிளகாய்களையும் தேவையான உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
குடமிளகாய் எல்லாம் நன்கு வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய்,பொட்டுக்கடலை பொடியை தூவி கிளற சுவையான குடமிளகாய்..வெங்காயம்...பொரியல் ரெடி.
பார்க்க கலர்ஃபுல்லாக இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

7 comments:

Menaga Sathia said...

looks good!!

ஹேமா said...

சுவையோடு வாசனையாவும் இருக்குமென்று நினைக்கிறேன்.சைவம் சமைக்கிறப்போ செய்து பாக்கிறேன் !

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Menaga.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Hema.

Asiya Omar said...

பார்க்கவே அருமை.

T.V.ராதாகிருஷ்ணன் said...
This comment has been removed by the author.
Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி asiya omar.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...