..
தேவையானவை:
கோவைக்காய் 1/4 கிலோ
மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
புளி சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
----
அரைக்க:
சின்ன வெங்காயம் 5
மிளகாய் வற்றல் 2
பூண்டு 2 பல்
தேங்காய் துருவல் 1 மேசைக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
-----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேபிலைசிறிதளவு
-----
செய்முறை:
கோவக்காயை நீட்ட வாக்கில் நறுக்கிக்கொள்ளவேண்டும்.
ஒரு microwave bowl ஐ எடுத்துக்கொண்டு அதில் கோவக்காயுடன் சிறிது தண்ணீர் தெளித்து மஞ்சள் தூள்சேர்த்து மொத்தம் 12 நிமிடம் வைக்கவேண்டும்.
நான்கு,நான்கு நிமிடங்களாக வைக்கவேண்டும்.மூன்றாவது தடவை வைக்கும் போது தேவையான உப்பு சேர்த்து வைக்கவேண்டும்.நன்கு வெந்துவிடும்.
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணையில் வதக்கி விழுது போல அரைத்துக்கொள்ளவேண்டும்.
-------
அடுப்பில் கடாயை வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து கோவக்காயை சேர்த்து வதக்கவேண்டும்.
புளியை கெட்டியாக கரைத்து ஊற்றி அரைத்த விழுதையும் சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.தண்ணீர் அதிகம் சேர்க்கவேண்டாம்.
எல்லாம் சேர்ந்து கொதித்தவுடன் இறக்கவேண்டும்.
-- கோவைக்காய் மசாலா சப்பாத்தி,பூரிக்கு ஏற்ற side dish. சாதத்தோடும் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம்.
6 comments:
மைக்ரோவில் முதலில் வேகவைத்துக் கொள்வது நல்ல ஆலோசனை. குறிப்புக்கு நன்றி.
அதெப்பிடி...என் பக்கத்தில நீங்க.
உங்க பக்கத்தில நான் !
கோவக்காய்ன்னா கொவ்வௌப்பழம்னு நினைக்கிறேன்.கிளி கொத்திச் சாப்பிடுமே !
ராமலக்ஷ்மி said...
மைக்ரோவில் முதலில் வேகவைத்துக் கொள்வது நல்ல ஆலோசனை. குறிப்புக்கு நன்றி.//
Thanks ராமலக்ஷ்மி.
// ஹேமா said...
அதெப்பிடி...என் பக்கத்தில நீங்க.
உங்க பக்கத்தில நான் !
அது தான் டெலிபதி.
//கோவக்காய்ன்னா கொவ்வௌப்பழம்னு நினைக்கிறேன்.கிளி கொத்திச் சாப்பிடுமே//
!
ஆமாம் நீங்கள் சொல்வதுசரி.
எனக்குப்பிடித்த காய்.வித்தியாசமாக சமைத்து காட்டி இருக்கீங்க.
Lovely idea on Kovakkai poriyal. I liked the masalas you added. Kovakkai is sweetish and it does need those.
I am going to try it out soon.
Thanks.
Post a Comment