Wednesday, February 15, 2012

..கோவக்காய் பொரியல்



தேவையானவை:

                               
 கோவைக்காய் 1/4 கிலோ
மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
----
அரைக்க:
பட்டை 1
கிராம்பு1
மராட்டிமொக்கு1
கடலைபருப்பு1தேக்கரண்டி
தனியா1தேக்கரண்டி
சீரகம்1தேக்கரண்டி
மிளகு1தேக்கரண்டி
வற்றல் மிளகாய்2
-----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலைசிறிதளவு
-----
செய்முறை:


கோவக்காயை நீட்ட வாக்கில் நறுக்கிக்கொள்ளவேண்டும்
.
அரைக்க கொடுத்துள்ளவைகளை எண்ணெயில் வறுத்து பொடி செய்து கொள்ளவேண்டும்.

ஒரு microwave bowl ஐ எடுத்துக்கொண்டு அதில் கோவக்காயுடன் சிறிது தண்ணீர் தெளித்து மஞ்சள் தூள்சேர்த்து மொத்தம் 12 நிமிடம் வைக்கவேண்டும்.
நான்கு,நான்கு நிமிடங்களாக வைக்கவேண்டும்.மூன்றாவது தடவை வைக்கும் போது தேவையான உப்பு சேர்த்து வைக்கவேண்டும்.நன்கு வெந்துவிடும்
.
வாணலியில் எண்ணெய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெந்த கோவக்காயை சேர்த்து வதக்கவேண்டும்.அதனுடன் அரைத்து வைத்துள்ள பொடியைசேர்த்து பிரட்டவேண்டும்.ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் சேர்த்து நன்கு பிரட்ட முறுகலாக வரும்.

கோவைக்காய்  பொரியல் சப்பாத்தி,பூரிக்கு ஏற்ற side dish. சாதத்தோடும் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம்.

20 comments:

தமிழ்நுட்ப்பம் said...

Norton Internet Security 2012 2Years License உடன் இலவசமாக கிடைக்கிறது!

http://tamiltechtips.blogspot.in/2012/02/norton-internet-security-2012-v19113-2.html


Pendriveய் Ramஆக பயன்படுத்தலாம்!

http://tamiltechtips.blogspot.in/2012/02/usb-drive-as-ram-give-your-windows-xp.html

தமிழ்நுட்ப்பம் said...

Norton Internet Security 2012 2Years License உடன் இலவசமாக கிடைக்கிறது!

http://tamiltechtips.blogspot.in/2012/02/norton-internet-security-2012-v19113-2.html


Pendriveய் Ramஆக பயன்படுத்தலாம்!

http://tamiltechtips.blogspot.in/2012/02/usb-drive-as-ram-give-your-windows-xp.html

Aruna Manikandan said...

Looks delicious :)

ADHI VENKAT said...

நல்ல ரெசிபி....

Jaleela Kamal said...

பார்க்கவே அருமையாக இருக்கு

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி தமிழ்நுட்பம்.

Kanchana Radhakrishnan said...

Thanks Aruna.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Jaleela.

ஹேமா said...

இதுக்குள்ள 5-6 நெத்தலிக்கருவாடு போட்டால் இன்னும் சூப்பர் !

Reva said...

Super super poriyal..:)
Reva

Menaga Sathia said...

மிகவும் சத்தான,வித்தியாசமான பொரியல்...

Asiya Omar said...

சூப்பர்.நிச்சயம் செய்து பார்ப்பேன்.

ஸாதிகா said...

கோவைக்காய் பொரியலுக்கு இத்தனை மசாலா ஐட்டங்கள் சேர்ப்பீர்களா?டிரை பண்ணி பார்த்துவிடுவோம்.

Kanchana Radhakrishnan said...

// ஹேமா said...
இதுக்குள்ள 5-6 நெத்தலிக்கருவாடு போட்டால் இன்னும் சூப்பர் !//

-:)))

Kanchana Radhakrishnan said...

// revathi said...
Super super poriyal..:)
Reva//
Thanks Reva.

Kanchana Radhakrishnan said...

// S.Menaga said...
மிகவும் சத்தான,வித்தியாசமான பொரியல்...//

வருகைக்கு நன்றி Menaga.

Kanchana Radhakrishnan said...

// Asiya Omar said...
சூப்பர்.நிச்சயம் செய்து பார்ப்பேன்.//


செய்துபாருங்கள்.வருகைக்கு நன்றி Asiya Omar.

Kanchana Radhakrishnan said...

// ஸாதிகா said...
கோவைக்காய் பொரியலுக்கு இத்தனை மசாலா ஐட்டங்கள் சேர்ப்பீர்களா?டிரை பண்ணி பார்த்துவிடுவோம்.//

செய்துபாருங்கள்.வருகைக்கு நன்றி
ஸாதிகா .

Asiya Omar said...

உங்களுக்கு அன்புடன் இரண்டு விருதுகள் வழங்கியுள்ளேன்.பெற்று கொள்ளவும்.
http://asiyaomar.blogspot.com/2012/02/blog-post_16.html

Kanchana Radhakrishnan said...

இரண்டு விருதுகளுக்கும் நன்றி ஆசியா.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...