தேவையானவை:
உடைத்த உளுந்து 1 கப்
அரிசிக்குருணை 1 கப்
வெந்தயம் 1 தேக்கரண்டி
பூண்டு 4 பல்
தேங்காய் பால் 1 கப்
சீரகம் 1 தேக்கரண்டி
மிளகு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
செய்முறை:
உடைத்த உளுந்து,அரிசிக்குருணை,வெந்தயம் மூன்றையும் தனித்தனியாக ஒரு மணி நேரம் தண்ணீரில் மூழ்குமளவுக்கு வைத்து ஊறவைக்கவேண்டும்.
ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் ஊறவைத்த மூன்றையும் சேர்த்து மேலும் ஒரு கப் தண்ணீருடன் குக்கரில் வைத்து மூன்று விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து தேவையான எண்ணெய் வைத்து சீரகம் மிளகு,பூண்டு,கறிவேப்பிலை தாளித்து குக்கரில் இருந்து எடுத்த உளுந்து அரிசி குருணை
கலவையை உப்புடன் சேர்த்து (தேவையானால் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்) கொதிக்கவைக்கவேண்டும்.
நன்றாக கொதித்தவுடன் தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவேண்டும்.
உளுத்தங்கஞ்சி உடல் களைப்பை போக்கும்.
10 comments:
சூப்பர் டேஸ்டி உளுந்தங்கஞ்சி.
எதிர்பார்த்திருந்த ரெஸிப்பி.பகிர்வுக்கு நன்றி.
என்னங்க இது.. நெஜமாவே யாராவது சாப்பிடுவாங்களா?
உளுத்தங்களி செய்யத்தெரியும். உளுத்தங்கஞ்சி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். செய்முறையும் எளிதாக உள்ளது. இன்றே செய்கிறேன். உளுந்து உடல்நலனுக்கு குறிப்பாய் பெண்களுக்கு மிகவும் நல்லது. பகிர்வுக்கு நன்றி காஞ்சனா.
// Asiya Omar said...
சூப்பர் டேஸ்டி உளுந்தங்கஞ்சி.//
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஆசியா.
ரெவெரி சொல்வது அத்தனையும் வடிகட்டின பொய்கள்; உண்மையை மறைத்து இந்தியனைப் பற்றி சொல்லும் பீ-த்த பெருமைகள்-பொய்கள். படியுங்க...மேலும்...
அமெரிக்கா ஏழைகள் மற்றும் பிச்சைக்காரர்களின் நாடு!லிங்க்...
http://www.nambalki.com/2012/06/blog-post_14.html
அமெரிக்க ஏழை பணக்கார இந்தியனை விட சொகுசாக வாழ்கிறான்! லிங்க்...
http://www.nambalki.com/2012/06/blog-post_4241.html
அமெரிக்கநாய்க்கும் அரசாங்க புகலிடம், Govt.Shelter, குளுகுளு A/C வசதி!லிங்க்...
http://www.nambalki.com/2012/06/govtshelter-ac.html
என்ன கேள்வியை வேண்டுமானாலும் eஎன்னிடம் கேளுங்கள். உங்கள் அபிமான ரெவெரியிடம் விவாதம் செய்ய நான் ரெடி! ரெவெரி ரெடியா? கேட்டு சொல்லுங்கள்!
அன்புள்ள,
நம்பள்கி!
www.nambalki.com
// ஸாதிகா said...
எதிர்பார்த்திருந்த ரெஸிப்பி.பகிர்வுக்கு நன்றி.//
வருகைக்கு நன்றி ஸாதிகா
//
அப்பாதுரை said...
என்னங்க இது.. நெஜமாவே யாராவது சாப்பிடுவாங்களா?//
:-))))
//
கீதமஞ்சரி said...
உளுத்தங்களி செய்யத்தெரியும். உளுத்தங்கஞ்சி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். செய்முறையும் எளிதாக உள்ளது. இன்றே செய்கிறேன். உளுந்து உடல்நலனுக்கு குறிப்பாய் பெண்களுக்கு மிகவும் நல்லது. பகிர்வுக்கு நன்றி காஞ்சனா.//
வருகைக்கு நன்றி கீதமஞ்சரி.
வருகைக்கு நன்றி நம்பள்கி.
Post a Comment