Thursday, September 13, 2012

டால் மாக்கனி


தேவையானவை:
கறுப்பு உளுந்து 1 கப்
வெங்காயம் 1
தக்காளி 2
----
மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
----
காரப்பொடி 1 டீஸ்பூன்
தனியாத்தூள் 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள் 1/2 டீஸ்பூன்
ஆம்சூர் பவுடர் 1 டீஸ்பூன்
வெங்காய தூள் 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
---
வெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்
பால் 1/2 கப்
கொத்தமல்லித்தழை சிறிதளவு
--
செய்முறை:


கருப்பு உளுந்தை குக்கரில் வைத்து வேகவைக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
--
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணைய் விட்டு முதலில் வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
 தக்காளியை சேர்த்து வதக்கவும்.
குக்கரில் இருந்து கறுப்பு உளுந்தை எடுத்து உப்பு,மஞ்சள்தூள்,பெருங்காயத்தூள் சேர்த்து வெங்காயம் தக்காளியுடன் கலக்கவும்.
சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
பின்னர் மேலே குறிப்பிட்ட காரப்பொடி,தனியாதூள்.சீரகதூள்,ஆம்சூர் பவுடர்,வெங்காய தூள் எல்லாவற்றையும் சேர்த்து கொதிக்க விடவும்.
கடைசியில் பாலை விட்டு இறக்கவும்.
இறக்கிய பின் வெண்ணைய் போடவும்.
கொத்தமல்லித்தழையால் அலங்கரிக்கவும்.
இது சப்பாத்தி,பூரி,நான்,புல்கா ரொட்டி ஆகியவற்றிற்கு ஏற்ற side dish.

7 comments:

ஸாதிகா said...

அருமையான சைட் டிஷ்

திண்டுக்கல் தனபாலன் said...

கறுப்பு உளுந்து - செய்ததில்லை...

வீட்டில் செய்து பார்ப்போம்... நன்றி...

Kanchana Radhakrishnan said...


//ஸாதிகா said...
அருமையான சைட் டிஷ்//


வருகைக்கு நன்றி ஸாதிகா.

ADHI VENKAT said...

தால் மக்கானி அருமையாக இருந்தது.

VijiParthiban said...

அருமையான சைட் டிஷ்....அருமை....

Kanchana Radhakrishnan said...

// கோவை2தில்லி said...
தால் மக்கானி அருமையாக இருந்தது.//

நன்றி கோவை2தில்லி.

Kanchana Radhakrishnan said...

// VijiParthiban said...
அருமையான சைட் டிஷ்....அருமை.//

Thanks VijiParthiban.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...