தேவையானவை:
கொத்தமல்லி 1 கட்டு
பச்சைமிளகாய் 2
பெருங்காயம் 1 சிறிய துண்டு
புளி சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
தாளிக்க:
கடுக் 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
கொத்தமல்லி
------
செய்முறை:
கொத்தமல்லியை நன்கு ஆய்ந்து தண்ணீரில் அலசிக்கொள்ளவும்.
பெருங்காயத்தை எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்.
மிக்சியில் ஆய்ந்த கொத்தமல்லி,பச்சைமிளகாய்,பெருங்காயம்,புளி தேவையான உப்பு சேர்த்து அரைக்கவும்.
பின்னர் கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிக்கவும்.
இட்லி,தோசைக்கு ஏற்றது.
10 comments:
எளிதான குறிப்பிற்கு நன்றி...
அம்மா இப்போவும் இதைமட்டும் அம்மியிலேதான் அரைப்பாங்க. (அம்மியும் வீட்டிலே இருக்கு). ஏன் அப்படினு கேட்டால், இது மிக்ஸில சரியா வராதுனு சொல்லுவாங்க. பட்டமொளகாய்தான் பயன்படுத்துவாங்கனு நெனைக்கிறேன். ரொம்ப நல்லாயிருக்கும் அவங்க செய்றது. அதை, யாரும் ரி-ப்ரொட்யூஸ் செய்வது கஷ்டம்- அளவு, ரேசியோ எல்லாம் அவங்களா செய்துகொள்வது.
இங்கே வந்து "அம்மா பெருமை" பேசுவதுக்கு மன்னிச்சுக்கோங்க!
காஞ்சனா மிக அருமை,வருண் அம்மா கைப்பக்குவமும் அருமை.
மிரா கிச்சனா அல்லது மீரா கிச்சனா!
நான் புதினா சட்னி செய்து இருக்கிறேன். கொத்தமல்லி முயற்சித்துப் பார்க்கவில்லை.
// திண்டுக்கல் தனபாலன் said...
எளிதான குறிப்பிற்கு நன்றி...//
வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.
//வருண் said...
அம்மா இப்போவும் இதைமட்டும் அம்மியிலேதான் அரைப்பாங்க. (அம்மியும் வீட்டிலே இருக்கு). ஏன் அப்படினு கேட்டால், இது மிக்ஸில சரியா வராதுனு சொல்லுவாங்க. பட்டமொளகாய்தான் பயன்படுத்துவாங்கனு நெனைக்கிறேன். ரொம்ப நல்லாயிருக்கும் அவங்க செய்றது. அதை, யாரும் ரி-ப்ரொட்யூஸ் செய்வது கஷ்டம்- அளவு, ரேசியோ எல்லாம் அவங்களா செய்துகொள்வது. //
பட்ட மிளகாயும் சேர்க்கலாம்.வருகைக்கு நன்றி வருண்.
//Asiya Omar said...
காஞ்சனா மிக அருமை,வருண் அம்மா கைப்பக்குவமும் அருமை.//
வருகைக்கு நன்றி Asiya.
//குட்டிபிசாசு said...
மிரா கிச்சனா அல்லது மீரா கிச்சனா!//
மிரா கிச்சன். வருகைக்கு நன்றி குட்டிபிசாசு.
மிக அருமை....
Thanks Viji Parthiban.
Post a Comment