தேவையானவை:
பார்லி 1/2 கப்
பயத்தம்பருப்பு 1/4 கப்
வெங்காயம் 1
தக்காளி 1
பச்சைமிளகாய் 2
சீரகம் 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் 1 துண்டு
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
எலுமிச்கம்பழம் 1
கொத்தமல்லித்தழை சிறிதளவு
நெய் 1 மேசைக்கரண்டி
உப்பு எண்ணெய் தேவையானது
--------
செய்முறை:
பார்லியை 15 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
ஒரு குக்கரை எடுத்துக்கொண்டு அதில் தனித்தனியே பார்லியையும் பயத்தம்பருப்பையும் வேகவைக்கவேண்டும்.(2 விசில்)
அடுப்பில் கடாயை வைத்து நெய்யில் சீரகத்தை பொரிக்கவேண்டும்.
அதனுடன் பெருங்காயத்தை பொரித்து குறுக்கே வெட்டிய பச்சைமிளகாயையும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவேண்டும்.
பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
அதனுடன் குக்கரில் இருந்து எடுத்த பார்லியையும் பயத்தம்பருப்பையும் தேவையான உப்பு,சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவேண்டும்.
கிச்சடி கொதித்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி எலுமிச்சம்பழத்தை பிழியவேண்டும்.
கொத்தமல்லித்தழையை தூவ பார்லி கிச்சடி ரெடி.
8 comments:
பார்லி கிச்சடி செய்துப் பார்க்கிறேன்.
புதுமையாக இருக்கிறது.
நன்றி.
புதிய சமையல் குறிப்பு... நன்றி...
செய்து பார்க்க வேண்டும்...
// கோமதி அரசு said...
பார்லி கிச்சடி செய்துப் பார்க்கிறேன்.
புதுமையாக இருக்கிறது.
நன்றி.//
செய்து பாருங்கள்.வருகைக்கு நன்றி கோமதி அரசு.
திண்டுக்கல் தனபாலன் said...
புதிய சமையல் குறிப்பு... நன்றி...
செய்து பார்க்க வேண்டும்//
செய்து பாருங்கள்.வருகைக்கு நன்றி
திண்டுக்கல் தனபாலன்.
பார்லியில் கிச்சடியா>பலே.
பார்லி நீர் பெருக்கும் அல்லவா.
வாரத்தில் ஒரு நாள் கண்ட்டிப்பாகச் செய்து பார்க்கலாம். நன்றி மா. புதுமையான ரெசிபி.
.வருகைக்கு நன்றி வல்லிசிம்ஹன்
"பார்லி கிச்சடி" குறிப்புகள் சாப்பிட தூண்டுகின்றன. நிச்சயம் செய்து பார்க்கிறேன்
Post a Comment