Sunday, September 9, 2012

காலிஃபிளவர் குருமா




தேவையானவை:

காலிஃபிளவர் 1 (சிறியது)
பட்டாணி 1/2 கப்
வெங்காயம் 2
உருளைக்கிழங்கு 2
மிளகாய் தூள் 1 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
கொத்தமல்லித்தழை சிறிதளவு
-----
அரைக்க:
பட்டை 1 துண்டு
லவங்கம் 1
கசகசா 1 தேக்கரண்டி
பொட்டுக்கடலை 1 மேசைக்கரண்டி
பூண்டு 3 பல்
துருவிய தேங்காய் 1/4 கப்
----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை 1 கொத்து
-------
செய்முறை:

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் வெந்நீர் இரண்டு கப் சிறிது உப்பு சேர்த்து காலிஃபிளவர் மூழ்கும் வரை வைக்கவேண்டும்.
பத்து நிமிடம் கழித்து எடுத்து காலிஃபிளவரை சிறு சிறு பூக்களாக எடுக்கவேண்டும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து ஒன்றிரண்டாக மசித்துக்கொள்ளவேண்டும்.
வெங்காயத்தை நீட்ட வாக்கில் நறுக்கிகொள்ளவேண்டும
அரைக்கக்கொடுத்துள்ளவைகளை நைசாக அரைத்துக்கொள்ளவேண்டும்.
-----
அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணையில் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து  வெங்காயம்,பட்டாணி இரண்டையும்  மஞ்சள்தூளுடன் வதக்கவேண்டும்.
அதனுடன் காலிஃபிளவரை சிறிது உப்புடன் சேர்த்து நன்கு வதக்கவேண்டும்.
காலிஃபிளவர் வெந்ததும் மிளகாய் தூள்,மசித்த உருளைக்கிழங்கு,அரைத்த விழுது சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவேண்டும்.
எல்லாம் சேர்ந்து கொதித்தவுடன் கொத்தமல்லித்தழையை தூவி இறக்கவேண்டும்.

காலிஃபிளவர் குருமா சப்பாத்தி,பூரிக்கு ஏற்றது.

9 comments:

Srividhya Ravikumar said...

looks yummy..

virunthu unna vaanga said...

looks so yummy... i love it very much... can have 2 more poori/chapathi with it...

VIRUNTHU UNNA VAANGA

Kanchana Radhakrishnan said...

Thanks
Srividya Ravikumar

Kanchana Radhakrishnan said...

// Vijayalakshmi Dharmaraj said...
looks so yummy... i love it very much... can have 2 more poori/chapathi with it...//

Thanks for the comment.

திண்டுக்கல் தனபாலன் said...

என்ன தான் வீட்டில் செய்தாலும் சரியாக வருவதில்லை... உங்களின் செய்முறைப்படி செய்து பார்ப்போம்... நன்றி சகோ...

ADHI VENKAT said...

வடக்கில் ”ஆலு கோபி” என்று அழைக்கப்படும் இந்த குருமா உங்க கைப்பக்குவத்தில் பிரமாதம்.

Kanchana Radhakrishnan said...

//திண்டுக்கல் தனபாலன் said...
என்ன தான் வீட்டில் செய்தாலும் சரியாக வருவதில்லை... உங்களின் செய்முறைப்படி செய்து பார்ப்போம்... நன்றி சகோ...//

நன்றி திண்டுக்கல் தனபாலன்.

Kanchana Radhakrishnan said...

// கோவை2தில்லி said...
வடக்கில் ”ஆலு கோபி” என்று அழைக்கப்படும் இந்த குருமா உங்க கைப்பக்குவத்தில் பிரமாதம்.//


வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி கோவை2தில்லி.

Kanchana Radhakrishnan said...

//கோவை2தில்லி said...
வடக்கில் ”ஆலு கோபி” என்று அழைக்கப்படும் இந்த குருமா உங்க கைப்பக்குவத்தில் பிரமாதம்.//


ஆலு கோபி என்பது உருளைக்கிழங்கில் செய்வது.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...