Tuesday, November 6, 2012

எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு




தேவையானவை:

சின்ன கத்திரிக்காய் 12                  
புளி எலுமிச்சைஅளவு
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் 2 மேசைக்கரண்டி
சாம்பார் பொடி 2 மேசைக்கரண்டி
உப்பு தேவையானது                                      
-------
வறுத்து அரைக்க தேவையானது:
சின்ன வெங்காயம் 10
வற்றல் மிளகாய் 7
துருவிய தேங்காய் 1/2 கப்
வேர்க்கடலை 10
சீரகம் 1 தேக்கரண்டி
வெந்தயம் 1/2 தேக்கரண்டி
கசகசா 1 தேக்கரண்டி
பெருங்காயம் 1 துண்டு
உப்பு சிறிதளவு
--------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
வெந்தயம் 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
-------
செய்முறை:
சின்ன கத்திரிக்காயை குறுக்கே வெட்டிக்கொள்ளவும்

                     குறுக்கே வெட்டிய கத்திரிக்காய்


வறுத்து அரைக்கக் கொடுத்துள்ளவைகளில் வெங்காயத்தை சிறிது எண்ணெயில் பொன்னிறமாக வறுக்கவும்.
கசகசாவை தனியே வெறும் வாணலியில் வறுக்கவும்.
மற்றவற்றை எண்ணெயில் வறுக்கவும்.
எல்லாவற்றையும் சிறிது உப்பு,தண்ணீர் சேர்த்து கெட்டியான விழுது போல் அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த விழுதை குறுக்கே வெட்டிய ஒவ்வொரு கத்திரிக்காயின் உள்ளும் அடைத்து மேலே கொஞ்சம் எண்ணெய் தடவவும்.
அப்படியே வாணலியில் சிறிது எண்ணெய் வைத்து வதக்கலாம்.
இல்லாவிடில் Oven ஐ Preheat செய்து விட்டு 25 நிமிடம் வைக்கவும்.(425deg.-F)(இந்த முறையில் செய்தால் கத்திரிக்காய் மொறு மொறு என்று இருக்கும்.) இதனை தனியே எடுத்து வைக்கவும்.

                        Oven ல் வைத்து எடுத்த கத்திரிக்காய்


                     
                                 எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு   

                           
அடுப்பில் நல்லெண்ணய்  வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து புளித்தண்ணீரில் மீதியுள்ள அரைத்த விழுதை கரைத்து
உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.மஞ்சள்தூள்,சாம்பார் பொடி சேர்க்கவும்.நன்கு கொதித்ததும் வதக்கிய கத்திரிக்காயை சேர்த்து
இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.

12 comments:

Yaathoramani.blogspot.com said...

எனக்கு அதிகம் பிடித்த குழம்பு
இனி நானே
செய்து கொள்ள முடியும் என் நம்பிக்கைதரும்
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

சூப்பர்... குறிப்பிற்கு நன்றி...
tm2

Kanchana Radhakrishnan said...

//
Ramani said...
எனக்கு அதிகம் பிடித்த குழம்பு
இனி நானே
செய்து கொள்ள முடியும் என் நம்பிக்கைதரும்
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்//


வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி Ramani.

Kanchana Radhakrishnan said...

// திண்டுக்கல் தனபாலன் said...
சூப்பர்... குறிப்பிற்கு நன்றி...//

வருகைக்கு நன்றி
திண்டுக்கல் தனபாலன்.

Avainayagan said...

சுவையான "எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு" செய்வதற்கான குறிப்புகள் தந்துள்ளமைக்கு நன்றி

வல்லிசிம்ஹன் said...

பார்த்தாலே சாப்பிட வைத்துவிடும் போலிருக்கிறது. பகிர்வுக்கு மிகவும் நன்றி.

Kanchana Radhakrishnan said...

//
வியபதி said...
சுவையான "எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு" செய்வதற்கான குறிப்புகள் தந்துள்ளமைக்கு நன்றி//


வருகைக்கு நன்றி வியபதி.

Kanchana Radhakrishnan said...


//வல்லிசிம்ஹன் said...
பார்த்தாலே சாப்பிட வைத்துவிடும் போலிருக்கிறது. பகிர்வுக்கு மிகவும்நன்றி //


வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி வல்லிசிம்ஹன்.

ராமலக்ஷ்மி said...

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

Kanchana Radhakrishnan said...

//
Avargal Unmaigal said...
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
எல்லாம் கைகூடி வந்து
என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்//

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

November 13, 2012 8:29 AM

Kanchana Radhakrishnan said...

//
ராமலக்ஷ்மி said...
தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!//

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

Asiya Omar said...

மிக அருமை.

Feast of Sacrifice Event - Results
http://www.asiyama.blogspot.com/2012/11/feast-of-sacrifice-event-results.html

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...