Saturday, December 1, 2012

" பெப்பெர் " பிரியாணி




தேவையானவை:
பாசுமதி அரிசி 1 கப்
குடமிளகாய் 1
காரட் 2
பட்டாணி 1/2 கப்
உருளைக்கிழங்கு 2
தக்காளி 2
நிலக்கடலை 10
முந்திரி பருப்பு 10
மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
நெய் 1 மேசைக்கரண்டி
---------
அரைக்க:
தேங்காய் துருவல் 1 கப்
மிளகு 1 மேசைக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி
--------
தாளிக்க:
சோம்பு 1/2 தேக்கரண்டி
கிராம்பு 2
ஏலக்காய் 2
-----
செய்முறை:

பாசுமதி அரிசியை 2 கப் தண்ணீரில் ஊறவைக்கவும்.
குடமிளகாய்,காரட்,உருளைக்கிழங்கு,தக்காளி எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
முந்திரிபருப்பு,நிலக்கடலை இரண்டையும் நெய்யில் வறுத்துக்கொள்ளவும்.
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை நன்றாக விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
----------
வாணலியில் எண்ணெய் வைத்து தாளிக்கவேண்டியவைகளை தாளித்து முதலில் தக்காளியை நன்றாக வதக்கி பின்னர் மற்ற காய்கறிகளை மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவேண்டும்.அதனுடன் தேவையான உப்பும்,மிளகாய் தூளும்,அரைத்த விழுதையும் சேர்த்து நன்கு வதக்கவேண்டும்.
வதக்கிய காய்கறிகளோடு ஊறவைத்த அரிசியை சேர்த்து அப்படியே ele cooker ல் வைக்கலாம்.
கடைசியில் வறுத்த முந்திரி,வேர்க்கடலை சேர்க்கவேண்டும்.

12 comments:

கோமதி அரசு said...

பிரியாணி மணக்கிறது.
செய்துபார்த்து விடுகிறேன்.
நன்றி.

ADHI VENKAT said...

பெப்பர் பிரியாணி தூள் கிளப்புதுல்ல...

Kanchana Radhakrishnan said...

// கோமதி அரசு said...
பிரியாணி மணக்கிறது.
செய்துபார்த்து விடுகிறேன்.
நன்றி.//


செய்துபாருங்கள்.வருகைக்கு நன்றி கோமதி அரசு.

Kanchana Radhakrishnan said...

// கோவை2தில்லி said...
பெப்பர் பிரியாணி தூள் கிளப்புதுல்ல...//


வருகைக்கு நன்றி கோவை2தில்லி.

மாதேவி said...

நன்றாக இருக்கின்றது.

திண்டுக்கல் தனபாலன் said...

ஆஹா... காரசாரமாக இருக்கும் போல...

செய்முறை விளக்கத்திற்கு நன்றி...
tm2

Asiya Omar said...

பெல் பெப்பர் பிரியாணியும் பகிர்ந்த பாத்திரமும் மிக அருமை..

ராமலக்ஷ்மி said...

புதுமையாய் இருக்கிறது. செய்து பார்க்கிறேன். நன்றி.

Kanchana Radhakrishnan said...

// மாதேவி said...
நன்றாக இருக்கின்றது.//


வருகைக்கு நன்றி மாதேவி.

Kanchana Radhakrishnan said...

// திண்டுக்கல் தனபாலன் said...
ஆஹா... காரசாரமாக இருக்கும் போல...

செய்முறை விளக்கத்திற்கு நன்றி...//

நன்றி திண்டுக்கல் தனபாலன்.

Kanchana Radhakrishnan said...

//Asiya Omar said...
பெல் பெப்பர் பிரியாணியும் பகிர்ந்த பாத்திரமும் மிக அருமை..//


'பெப்பர்' (மிளகு) பிரியாணி.
வருகைக்கு நன்றி ஆசியா.

Kanchana Radhakrishnan said...

// ராமலக்ஷ்மி said...
புதுமையாய் இருக்கிறது. செய்து பார்க்கிறேன். நன்றி.//

வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...