தேவையானவை: மிதி பாகற்காய்
மிதி பாகற்காய் 200 gm
கொண்டைக்கடலை 1/2 கப் (channa)
துவரம்பருப்பு 1 கப்
புளி எலுமிச்சை அளவு
மஞ்சள் பொடி 1 டீஸ்பூன்
உப்பு எண்ணெய் தேவையானது
----
அரைக்க:
தனியா 2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் 1 டீஸ்பூன்
கடலைபருப்பு 2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 10
உளுத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய் துருவல் 1/2 கப்
பெருங்காயம் சிறிதளவு
---
தாளிக்க:
கடுகு,உளுத்தம்பருப்பு,மிளகாய்வற்றல்,கறிவேப்பிலை
-----
செய்முறை:
1.துவரம்பருப்பை மஞ்சள்பொடி சேர்த்து குக்கரில் வேகவைக்கவும்.
2.மிதி பாகற்காயை காம்பை எடுத்துவிட்டு குறுக்காக வெட்டவும்.
3.கொண்டக்கடலையை முந்தினநாள் இரவே ஊறவைக்கவும்.
4.அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணய் விட்டு வறுத்து நைசாக இல்லாமல் அரைத்துக்கொள்ளவும்.
----
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு எண்ணைவிட்டு தாளிக்கவேண்டியவைகளை தாளிக்கவும்.
பின்னர் குறுக்காக வெட்டிய பாகற்காய்,ஊறவைத்த கொண்டக்கடலை இரண்டையும் சேர்த்து வதக்கவும்.
மிதி பாகற்காய் நன்றாக வெந்ததும் வேகவைத்த துவரம்பருப்பு,அரைத்த விழுது,உப்பு மூன்றையும் சேர்த்து கொதிக்க வைக்கவும்
புளியை கரைத்துவிடவும். நன்றாக கொதிவந்ததும் இறக்கவும்.
14 comments:
புது மாதிரி பாகற்காய் பிடலை செய்து பார்க்க வேண்டும்.
செய்துபாருங்கள்.வருகைக்கு நன்றி கோமதி அரசு.
சர்க்கரை சொத்து அதிகம் உள்ளவங்க கண்டீப்பா இதை சாப்பிடனும்
ஆஹா, மிது பாகற்காய் பிட்லை சூப்பராக இருக்குமே.
குறுக்கே வெட்டிய மிது பாகற்காய் ஜிமிக்கி போல பார்க்கவே ஜோராக இருக்கும். பிட்லை செய்து சாப்பிட்டால் அதைவிட ஜோராகத்தான் இருக்கும்.
செய்முறைப் பகிர்வு ந்ன்றிகள்.
சூப்பராக இருக்கு.இப்பவே டேஸ்ட் செய்ய ஆசை.
// கவியாழி கண்ணதாசன் said...
சர்க்கரை சொத்து அதிகம் உள்ளவங்க கண்டீப்பா இதை சாப்பிடனும்//
.வருகைக்கு நன்றி கவியாழி கண்ணதாசன்.
//வை.கோபாலகிருஷ்ணன் said...
ஆஹா, மிது பாகற்காய் பிட்லை சூப்பராக இருக்குமே.
குறுக்கே வெட்டிய மிது பாகற்காய் ஜிமிக்கி போல பார்க்கவே ஜோராக இருக்கும். பிட்லை செய்து சாப்பிட்டால் அதைவிட ஜோராகத்தான் இருக்கும்.
செய்முறைப் பகிர்வு ந்ன்றிகள்.//
பாராட்டுக்கும் வருகைக்கும் நன்றி வை.கோபாலகிருஷ்ணன்
// 3, 2013 10:25 AM
Asiya Omar said...
சூப்பராக இருக்கு.இப்பவே டேஸ்ட் செய்ய ஆசை.//
செய்துபாருங்கள்.வருகைக்கு நன்றி Asiya Omar.
எனக்கு மிகவும் பிடித்த ஐட்டம்
இனி நானே நிச்சயம் செய்த்துவிடுவேன்
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
tha.ma 2
.வருகைக்கு நன்றி Ramani.
அருமையான செய்முறை. பாவல் நான் சாப்பிடவேண்டிய ஒன்று. மிக நன்றி காஞ்சனா.
செய்து பார்க்கிறேன்.பார்க்கவே ருசியாக இருக்கிறது.
நன்றிமா.
செய்துபாருங்கள்.வருகைக்கு நன்றி வல்லிசிம்ஹன்.
என்க்கு பாகற்காய் ரெம்ப பிடிக்கும்.உங்கள் பாகற்காய் பிடலையும் சூப்பர்!!!
Post a Comment