Friday, January 11, 2013

புதினா துவையல்




தேவையானவை:
புதினா 1 கட்டு
மிளகாய் வற்றல் 4
உளுத்தம்பருப்பு 1 மேசைக்கரண்டி
பெருங்காயம் 1  துண்டு
புளி சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது             புதினா

-------
செய்முறை:
புதினாவை நன்கு ஆய்ந்துவிட்டு தண்ணீரில் அலசிக்கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் வைத்து புதினாவை பிழிந்து போட்டு வதக்கவும்.
பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
மிளகாய் வற்றல்.உளுத்தம்பருப்பு,பெருங்காயம் மூன்றினையும் எண்ணெயில் வறுக்கவும்.
வதக்கிய புதினா,வறுத்த மிளகாய் வற்றல் உளுத்தம்பருப்பு,பெருங்காயம்,புளி,உப்பு எல்லாவற்றையும் சேர்த்து மிக்சியில் அரைக்கவும்
சூடான சாதத்துடன் சற்று நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிட அருமை..

9 comments:

கோமதி அரசு said...

நீங்கள் சொன்ன பக்குவத்தில் புதினா துவையல் செய்வேன் நானும்.
இதனுடன் கொத்துமல்லி, கருவேப்பிலையும் கலந்தும் செய்வேன்.
உங்களுக்கும், உங்கள் கும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

ADHI VENKAT said...

நானும் இதே செய்முறையில் தான் செய்வேன். இதனுடன் சிறு துண்டு இஞ்சி சேர்த்தால் மேலும் சுவை கூடுகிறது.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

Kanchana Radhakrishnan said...

நானும் கறிவேப்பிலை,கொத்தமல்லி இரண்டும் சேர்த்து செய்வேன்.
வருகைக்கு நன்றி கோமதி அரசு.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி கோவை2தில்லி.

Vijiskitchencreations said...

நானும் இதே முறையில் கொஞ்சம் கொத்தமல்லி இலைகள் சேர்த்து செய்வேன். இதன் ருசியே தனி.
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

ருசியான புதினா துவையல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.


இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

இராஜராஜேஸ்வரி said...

ருசியான புதினா துவையல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.


இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Vijiskitchencreations.இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி
இராஜராஜேஸ்வரி.
இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...