Monday, January 14, 2013

கலந்த சாதங்கள் (சித்ரான்னம்)



 புளியோதரை


தேவையானவை:

பாசுமதி அரிசி 2 கப்
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
நல்லெண்ணைய் 4 டேபிள்ஸ்பூன்
முந்திரிபருப்பு 10
வேர்க்கடலை 10
கறிவேப்பிலை சிறிதளவு
நெய் 1 டீஸ்பூன்
---------
புளிக்காய்ச்சல் செய்ய தேவையானது:

புளி 2 எலுமிச்சை அளவு
மிளகாய்வற்றல் 6
வெந்தயம் 2 டீஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கடலைபருப்பு 1 டீஸ்பூன்
பெருங்காயம் 1 துண்டு

செய்முறை:


வாணலியில் எண்ணைய் விடாமல் வெந்தயத்தை வறுத்து எண்ணைய் விட்டு மிளகாய்வற்றலை வறுத்து இரண்டையும் சிறிது உப்போடு நன்கு பொடி பண்ணிக்கொள்ளவும்.

புளியை இரண்டு கப் தண்ணீரில் கெட்டியாக கரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணைய் விட்டு கடுகு,உளுத்தம்பருப்பு,கடலைபருப்பு,மீதமுள்ள 2 மிளகாய்,பெருங்காயம் இவற்றை வறுத்துக்கொண்டு தயாராக உள்ள புளித்தண்ணியை சிறிது உப்புடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.வெந்தயப் பொடியில் பாதியை இதனுடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
20 நிமிடங்கள் நன்றாக கொதித்து கெட்டியானதும் இறக்கவேண்டும். இப்பொழுது புளிக்காய்ச்சல் ரெடி.

பாசுமதி அரிசியை ஒரு கப்புக்கு 1 1/2 கப் தண்ணீர் வைத்து உதிரியாக குக்கரில் 3 விசில் வரும் வரை வைக்கவும்.(ele,cooker லும் வைக்கலாம்)
சாதம் ஆறினவுடன் ஒரு தட்டில் பரவலாக போட்டு மஞ்சள் தூள் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணைய் சேர்த்து பிசறவேண்டும்.15 நிமிடம் ஊறவேண்டும்.
பின்னர் செய்து வைத்திருக்கும் புளிக்காய்ச்சலை சேர்க்கவும் மீதமுள்ள பொடியை சேர்க்கவும்..முந்திரிபருப்பு,வேர்க்கடலை,கறிவேப்பிலை மூன்றையும் சிறிது நெய்யில் வறுத்து நன்றாக கலந்து வைக்கவும்.
--------------------------------------

எலுமிச்சம்பழ சாதம்.

தேவையானவை
பாசுமதி அரிசி 2 கப்
எலுமிச்சம்பழம் 2
மஞ்சள் பொடி 1 டீஸ்பூன்
நல்லெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்

பொடிபண்ண:
வெந்தயம் 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 3
உப்பு தேவையானது

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 2 (நாலாக கிள்ளிக்கொள்ளவும்)
முந்திரிபருப்பு 5
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை 1 கொத்து'

செய்முறை:

1.பாசுமதி அரிசியை 40 நிமிடம் (ஒரு கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர்)ஊறவைக்கவும்.
அப்படியே Electric cooker ல் வைத்தால் உதிரியாக வரும்.

2.சாதத்தை ஒரு அகண்ட தட்டில் கொட்டி அதன் மீது மஞ்சள்தூள்,நல்லெண்ணைய் கலந்து ஆறவைக்கவும்.

3.வாணலியில் எண்ணைய் விடாமல் வெந்தயத்தை வறுக்கவேண்டும்.
சிறிது எண்ணைய் விட்டு மிளகாய் வற்றலை வறுக்கவேண்டும்.
உப்பு வறுக்கவேண்டாம்.
மூன்றையும் பொடி பண்ணி சாதத்தில் தூவவேண்டும்.
4.கடைசியாக தாளிக்கவேண்டியவைகளை தாளித்து அதையும் சாதத்தில் கலந்து
எலுமிச்சம்பழம் பிழிய வேண்டும்.
எல்லாவற்றையும் நன்றாக கலந்து எடுத்து வைக்கவேண்டும்.

(சாதாரண பச்சைஅரிசியிலும் செய்யலாம்.பாசுமதி சற்று சுவையைக் கூட்டும்)
----------------------------------------


தேங்காய் சாதம்

தேவையானவை:
பாசுமதி அரிசி 1 கப்
தேங்காய் துருவல் 1 கப்
மிளகாய் வற்றல் 2 எண்ணெயில் கடுகு
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு தேவையானது
தேங்காய் எண்ணெய் 1 மேசைக்கரண்டி
-------
செய்முறை

பாசுமதி அரிசியை 20 நிமிடம் ஊறவைத்து உதிரியாக வடித்துக்கொள்ளவும்.
தேங்காய் எண்ணெயில் தேங்காயை வறுத்துக்கொள்ளவும்.
சிறிது தேங்காய் எண்ணெயில் கடுகு,உளுத்தம்பருப்பு,கிள்ளிய மிளகாய் வற்றல்,கறிவேப்பிலை தாளித்துக்கொள்ளவும்.
ஒரு அகண்ட தட்டில் சாதத்தை பரவலாக போட்டு அதனுடன் வறுத்த தேங்காய் துருவல்,தாளித்த கடுகு,உளுத்தம்பருப்பு,மிளகாய் வற்றல்,கறிவேப்பிலை தேவையான் உப்பு எல்லாவற்றையும் சேர்த்து கலக்கவும்.
-------
கலந்த சாதங்களை அப்பளம்,வடகம் ஆகியவற்றுடன் சாப்பிடலாம்.
தவிர்த்து சிறிது மோர்க்குழம்புடனும் சாப்பிடலாம்
காணும் பொங்கல்,ஆடிப்பெருக்கு,சித்ரா பௌர்ணமி ஆகிய நாட்களில் 'சித்ரான்னம்' என்ற பெயரில் கலந்த சாதங்களை செய்வது வழக்கம்.
=====================
எள்ளு சாதமும் செய்யலாம்.
எள்ளுப் பொடிக்கு இந்த லிங்க் ஐ பார்க்கவும்.
http://annaimira.blogspot.com/2012/07/blog-post_31.html

6 comments:

ஸாதிகா said...

அருமையாக உள்ளது!

கோமதி அரசு said...

கலந்த சாதங்கள் படங்களை பார்த்தவுடன் செய்து பார்க்க ஆசை வந்து விட்டது.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி கோமதி அரசு.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி ஸாதிகா.

M. Shanmugam said...

அருமையான சமையல் குறிப்புகளை தந்தமைக்கு மிக்க நன்றி.

Tamil Latest Movie News

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி M. Shanmugam.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...