Sunday, March 31, 2013

பயத்தம் உருண்டை




தேவையானவை:
பயத்தம்பருப்பு 2 கப்
பொடித்த சர்க்கரை 2 கப்
முந்திரிபருப்பு 20
நெய் 1 கப்
ஏலப்பொடி 1 மேசைக்கரண்டி
------
செய்முறை:

பயத்தம்பருப்பை வெறும் வாணலியில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு சிவக்க வறுத்து மாவாக அரைக்கவேண்டும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் வறுத்த பயத்தமாவு,பொடித்த சர்க்கரை,முந்திரிபருப்பு (உடைத்து நெய்யில் வறுத்தது)ஏலப்பொடி,உருக்கிய நெய் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலந்து சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவேண்டும்.

11 comments:

கோமதி அரசு said...

நாங்கள் இதை நெய் உருண்டை என்போம். தீபாவளி பண்டிகையில் இது கண்டிப்பாய் இருக்கும்.

குழந்தைகளுக்கு நல்ல சத்துள்ள பண்டம்.
உங்கள் பகிர்வுக்கு நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

ருசியான பயத்தம்பருப்பு உருண்டை ப்டத்தில் பார்க்கவெ அருமையாக உள்ளது. பாராட்டுக்கள்.

Kanchana Radhakrishnan said...

// கோமதி அரசு said...
நாங்கள் இதை நெய் உருண்டை என்போம். தீபாவளி பண்டிகையில் இது கண்டிப்பாய் இருக்கும்.

குழந்தைகளுக்கு நல்ல சத்துள்ள பண்டம்.
உங்கள் பகிர்வுக்கு நன்றி.

ஆம்.குழந்தைகளுக்கு நல்ல சத்துள்ள பண்டம்.வருகைக்கு நன்றி கோமதி அரசு.

VijiParthiban said...

பயத்தம்பருப்பு உருண்டை அருமையாக உள்ளது.....

திண்டுக்கல் தனபாலன் said...

சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம்-(குழந்தைகள்) ஹிஹி...

Kanchana Radhakrishnan said...

Thanks Viji Parthiban.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்

Kanchana Radhakrishnan said...


// வை.கோபாலகிருஷ்ணன் said...
ருசியான பயத்தம்பருப்பு உருண்டை ப்டத்தில் பார்க்கவெ அருமையாக உள்ளது. பாராட்டுக்கள்.//


வருகைக்கு நன்றி
வை.கோபாலகிருஷ்ணன் Sir.

ஸாதிகா said...

பயத்தம்பருப்பு உருண்டை அருமை!

Kanchana Radhakrishnan said...

Thanks ஸாதிகா.

ADHI VENKAT said...

என் தில்லி தோழி ஒருவருக்கு இது மிகவும் என்பார். செய்து பார்க்கிறேன்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...