Tuesday, March 19, 2013

அரைக்கீரை STEW




தேவையானவை:
அரைக்கீரை 1 கட்டு
தேங்காய்பால் 1 கப்
வெங்காயம் 1
உருளைக்கிழங்கு 1
பூண்டு 4 பல்
மிளகு தூள் 1 தேக்கரண்டி
ஆலிவ் எண்ணெய் 1 மேசைக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
-----
செய்முறை:

அரைக்கீரையை நன்றாக ஆய்ந்துவிட்டு பொடியாக நறுக்கி சிறிது தண்ணீர் தெளித்து microwave bowl ல் வைத்து microwave oven ல்
ஐந்து நிமிடம் வைத்து எடுத்து மீண்டும் சிறிது உப்பு சேர்த்து இரண்டு  நிமிடம் வைத்தால் கீரை நன்றாக வெந்துவிடும்.
இதை தனியாக எடுத்து வைக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக்கொள்ளவும்.
-------
வாணலியில் எண்ணெய் வைத்து வெங்காயத்தையும் பூண்டையும் நன்றாக வதக்கவும்.
அதனுடன் வேகவைத்த கீரை,மசித்த உருளைக்கிழங்கு,மிளகு தூள் சிறிது தண்ணீர்,உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
தேங்காய் பால் சேர்த்து சிறிது கொதித்தவுடன் ஆலிவ் எண்ணெய் ஊற்றி இறக்கவும்.
------
இட்லி, இடியாப்பம், இவைகளுக்கு ஏற்ற sidedish.

7 comments:

ராமலக்ஷ்மி said...

அருமையான குறிப்பு.

செய்து பார்க்கிறேன்.

கோமதி அரசு said...

நன்றாக இருக்கே! செய்து பார்த்துவிடுகிறேன்.நன்றி.

Kanchana Radhakrishnan said...

செய்துபாருங்கள்.வருகைக்கு நன்றி கோமதி அரசு.

திண்டுக்கல் தனபாலன் said...

இப்படி எல்லாம் செய்ததில்லை...

குறிப்பிற்கு நன்றி...

Kanchana Radhakrishnan said...

திண்டுக்கல் தனபாலன் said...
இப்படி எல்லாம் செய்ததில்லை...//

:))))

ஸாதிகா said...

கீரையுடன் உருளை சேர்த்து வித்தியாசமாக உள்ளதே.

Kanchana Radhakrishnan said...

Thanks ஸாதிகா.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...