புன்சை சிறுதானியங்களில் சிறந்த தானியமாகக் கருதப்படுவது சாமை.
சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் கொண்டுவர முக்கிய பங்கு வகிப்பது சாமை.
அரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட தானியம் சாமை.
இதில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது.
-------
சாமை கஞ்சிக்கு தேவையானது:
சாமை
சாமை 1 கப்
சின்ன வெங்காயம் 10
மோர் 1 கப்
உப்பு தேவையானது
------
செய்முறை:
ஒரு கப் சாமையை மூன்று கப் தண்ணீருடன் குக்கரில் மூன்று விசில் வரும்வரை வைத்து எடுக்கவேண்டும்.
ஆறின பிறகு குக்கரில் இருந்து எடுத்து ஒரு அகண்ட பாத்திரத்தில் வைத்து மோரைக்கடைந்து தேவையான உப்புடன் சேர்க்கவேண்டும்.சாமையும் மோரும் சேர்ந்து கட்டியில்லாமல் கலக்கவேண்டும்.
சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்து சாப்பிடலாம்.
சாமை கஞ்சியை காலை உணவாக எடுத்துக்கொள்ளலாம்.
4 comments:
சுவையான சாமை கஞ்சி... நன்றி சகோ...
வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.
சர்க்கரை நோய் கட்டுப்படுத்தும் கஞ்சி செய்வது பற்றிய குறிப்பிற்கு நன்றி
வருகைக்கு நன்றி Viya Parthy.
Post a Comment