Thursday, July 4, 2013

டால் மாக்கனி



தேவையானவை:
கறுப்பு உளுந்து 1 கப்
வெங்காயம் 1
தக்காளி 2
----
மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
----
காரப்பொடி 1 டீஸ்பூன்
தனியாத்தூள் 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள் 1/2 டீஸ்பூன்
ஆம்சூர் பவுடர் 1 டீஸ்பூன்
வெங்காய தூள் 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
---
வெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்
பால் 1/2 கப்
கொத்தமல்லித்தழை சிறிதளவு
--
செய்முறை:



கருப்பு உளுந்தை குக்கரில் வைத்து வேகவைக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
--
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணைய் விட்டு முதலில் வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
 தக்காளியை சேர்த்து வதக்கவும்.
குக்கரில் இருந்து கறுப்பு உளுந்தை எடுத்து உப்பு,மஞ்சள்தூள்,பெருங்காயத்தூள் சேர்த்து வெங்காயம் தக்காளியுடன் கலக்கவும்.
சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
பின்னர் மேலே குறிப்பிட்ட காரப்பொடி,தனியாதூள்.சீரகதூள்,ஆம்சூர் பவுடர்,வெங்காய தூள் எல்லாவற்றையும் சேர்த்து கொதிக்க விடவும்.
கடைசியில் பாலை விட்டு இறக்கவும்.
இறக்கிய பின் வெண்ணைய் போடவும்.
கொத்தமல்லித்தழையால் அலங்கரிக்கவும்.
இது சப்பாத்தி,பூரி,நான்,புல்கா ரொட்டி ஆகியவற்றிற்கு ஏற்ற side dish.

12 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வித்தியாசமான குறிப்பு... செய்து விட வேண்டியது தான்...

நன்றி...

Kanchana Radhakrishnan said...

நன்றி... திண்டுக்கல் தனபாலன்.

ராஜி said...

கறுப்பு உளுந்து ஆரோக்கியத்துக்கு நல்லதுனாலும் அதோட பயன்பாடு குறைவே! இனி இப்படி செஞ்சு பார்க்க வேண்டியதுதான்

sathishsangkavi.blogspot.com said...

பேரும் குழம்பும் வித்தியாமாக இருக்கும்... சுவை எப்படின்னு செய்து பார்க்கனும்...

கோமதி அரசு said...

அருமையான டால் மக்கானி.
வட இந்தியர்கள் விரும்பி சாப்பிடும் டால் மக்கானி.
நன்றி.

ஸாதிகா said...

சூபர் ஆக சமைத்து இப்படி கொத்தாக கொத்துமல்லியைதூவி மறைத்து விட்டீர்களே:(

Kanchana Radhakrishnan said...

@ ராஜி.

டால் மாக்கனிக்கு எனக்கு தெரிஞ்சு கறுப்பு உளுந்துதான் போடுவார்கள்.நன்றாக இருக்கும்.வருகைக்கு நன்றி ராஜி.

Kanchana Radhakrishnan said...

@ சங்கவி.

செய்துபாருங்கள்.நன்றாக இருக்கும்.வருகைக்கு நன்றி சங்கவி.

Kanchana Radhakrishnan said...

@ கோமதி அரசு.

வருகைக்கு நன்றி கோமதி அரசு.

ADHI VENKAT said...

ரோஷ்ணிக்கு மிகவும் பிடித்தது தால் மக்கனி...

கறுப்பு உளுந்துடன், ராஜ்மா, மசூர் தால் ஆகியவையும் சேர்ப்பார்கள்.

Kanchana Radhakrishnan said...

@ ஸாதிகா

:))))

Kanchana Radhakrishnan said...


@ கோவை2தில்லி

வருகைக்கு நன்றி Aadhi.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...