தேவையானவை:
அரிசி மாவு 1கப்
உப்பு தேவையானது
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
---
அரைக்க:
துவரம்பருப்பு 1/4 கப்
கடலைப்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
பயத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கடலை 1 டேபிள்ஸ்பூன்
சிவப்பு மிளகாய் 2
---
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
செய்முறை:
ஒரு அகண்ட பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.தண்ணீர் நன்கு கொதித்தவுடன் உப்பு,பெருங்காயத்தூள் சேர்த்து அரிசி மாவை பரவலாக தூவி கட்டிதட்டாமல் கிளறவும்.
கிளறிய மாவு ஆறியவுடன் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தனியே எடுத்து வைக்கவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரை மணிநேரம் ஊறவைத்து வடிகட்டி கரகரப்பாக அரைக்கவும்.அரைத்த விழுதை இட்லி தட்டில் வைத்து 15 நிமிடம் ஆவியில் வேகவைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்கவேண்டியவைகளை தாளித்து ஆவியில் வைத்து எடுத்த பருப்பு கலவையை சேர்த்து நன்கு கிளறவும்.உதிரியாக வரும்.பின்னர் தயாராக உள்ள மணி கொழுக்கட்டைகளை சேர்த்து நன்கு பிரட்டி எடுத்து வைக்கவும்.
பள்ளியிலிருந்து வரும் சிறுவர் சிறுமிகளுக்கு ஒரு அருமையான மாலை நேர சிற்றுண்டி இது.
10 comments:
முல்லைப் பூப்போல் மணிமணியாக அழகாக இருக்கிறது மணி கொழுக்கட்டை... குழந்தைகளுக்கு(ம்) மிகவும் பிடிக்கும்... செய்முறை குறிப்பிற்கு நன்றி... வாழ்த்துக்கள்...
பெயரே சுவையாக.. அருமையான குறிப்பு.
@ திண்டுக்கல் தனபாலன்.
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி
திண்டுக்கல் தனபாலன்.
பார்கவே செமையா இருக்கு. செஞ்சு பார்க்கனும்ன்னு ஆவலை தூண்டுது.
தேங்காய், மிளகாய்வற்றல் அரைத்து தாளிப்போம், இதில் நீங்கள் துவரம்பருப்பு, பாசிபருப்பு, அரைத்து உசிலி போல் செய்து தாளிக்க சொல்கிறீர்கள் செய்து பார்க்கிறேன்.
நன்றி.
@ ராமலக்ஷ்மி
வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி.
@ ராஜி
செய்து பாருங்கள்.வருகைக்கு நன்றி ராஜி.
@ கோமதி அரசு.
வருகைக்கு நன்றி கோமதி அரசு.
கொஞ்சம் வேலை கொள்ளும் என்று நினைக்கிறேன். ஆனால் சுவையும் சத்தும் கூடிய சிற்றுண்டியாக இருப்பதால் கட்டாயம் செய்துபார்க்கிறேன். நன்றி காஞ்சனா.
நீங்கள் சொல்வது சரி தான்.கொஞ்சம் நேரம் எடுக்கும்.ஆனால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதை பார்க்கும்போது பட்ட சிரமம் மறைந்துவிடும்.வருகைக்கு நன்றி கீதமஞ்சரி.
Post a Comment