Monday, August 12, 2013

தனியா சட்னி



தேவையானவை:
தனியா 1/2 கப்
மிளகாய் வற்றல் 3
பூண்டு 3 பல்
புளி சிறிதளவு
தேங்காய் துருவல் 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
-----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
----
செய்முறை:

தனியாவை எண்ணெய் விடாமல் வறுத்துக்கொள்ளவும்.
மிளகாய் வற்றல்,பூண்டு,புளி மூன்றையும் சிறிது எண்ணெய் விட்டு வறுத்துக்கொள்ளவும்.
அதே வாணலியில் தேங்காய் துருவல்,கறிவேப்பிலை இரண்டையும் ஒரு பிரட்டு பிரட்டினால் போதும்.
எல்லாவற்றையும் தேவையான உப்புடன் சேர்த்து அரைக்கவும்.
தாளிக்க வேண்டியவைகளை தாளிக்கவும்.
தனியா சட்னியை நல்லெண்ணெய் சேர்த்து சாதத்தோடு சாப்பிடலாம்.
இட்லி,தோசைக்கும்  சிறந்த  side dish ஆகும்.

10 comments:

ஸாதிகா said...

வித்த்யாசமான சட்னி

கோமதி அரசு said...

நல்ல சுவையான சட்னி.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி
கோமதி அரசு.

Kanchana Radhakrishnan said...

@ ஸாதிகா

வருகைக்கு நன்றி ஸாதிகா

இராஜராஜேஸ்வரி said...

தனியா பித்தத்தை தணிக்கும்..
ருசியான சட்னிக்கு பாராட்டுக்கள்..!

இராஜராஜேஸ்வரி said...

ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்துரைத்து
சிறப்பித்தமைக்கு மனம் நிறைந்த
இனிய அன்பு நன்றிகள்..!

Kanchana Radhakrishnan said...


வருகைக்கு நன்றி
இராஜராஜேஸ்வரி.

Avainayagan said...

தனியாவில சட்னி செய்து சாப்பிட்டதில்லை. இப்போ செய்து சாப்பிட்டுப் பார்த்துவிட வேண்டியதுதான்

Avainayagan said...
This comment has been removed by the author.
Kanchana Radhakrishnan said...


வருகைக்கு நன்றி Viya Parthy.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...