1.பாதாம் அல்வா
தேவையானவை:
பாதாம் பருப்பு 1 கப் (அரைத்த விழுது)
சர்க்கரை1 1/2 கப்
நெய் 1 கப்
குங்குமப்பூ சிறிது (optional)
ஏலக்காய் தூள் 1/2 டீஸ்பூன்
Lemon yellow colour 1/2 டீஸ்பூன்
செய்முறை:
பாதாம் பருப்புகளை கொதிக்கும் நீரில் போட்டு அரைமணிநேரம் மூடிவைக்கவேண்டும்.பின்னர் அதனை எடுத்து தோலுரித்து சிறிது தண்ணீருடன் மிக்ஸியில் சற்று கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.
அடுப்பில் சற்று அடி கனமான பாத்திரத்தை வைத்து பாதாம் விழுதுடன் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவேண்டும்.உருட்டுகிற பதம் வருகிறவரை கிளறவேண்டும்.பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு பாதாம் பருப்பு விழுது,சர்க்கரை கலவையில் நெய் சேர்த்து கிளறவேண்டும்.(அடுப்பு எரியும்போதே நெய் ஊற்றி கிளறினால் அல்வாவின் நிறம் மாறிவிடும்)அல்வாவானது பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்.
அல்வாவில் ஏலப்பொடி,குங்குமப்பூ,lemon colour சேர்க்கவேண்டும்
----------
2. ரிப்பன் பக்கோடா
தேவையானவை:
கடலைமாவு 2 கப்
அரிசிமாவு 1 கப்
காரப்பொடி 1 மேசைக்கரண்டி
மிளகுத்தூள் 1 தேக்கரண்டி
பெருங்காயம் 1 தேக்கரண்டி
வெண்ணைய் 1/4 கப்
உப்பு,எண்ணைய் தேவையானது
செய்முறை:
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் கடலைமாவு,அரிசிமாவு இரண்டையும் சேர்த்து கலக்கவேண்டும்.
உப்பையும் பெருங்காயத்தையும் சிறிது தண்ணீரில் கரைத்து மாவில் விடவேண்டும்.
அதனுடன் காரப்பொடி,மிளகு தூள்,வெண்ணைய் எல்லாவற்றையும் தேவையான தண்ணீருடன் சேர்த்து கெட்டியாக பிசையவேண்டும்.
வாணலியில் எண்ணைய் வைத்து காய்ந்த பின் தேன்குழல் படியில் நாடா வில்லையைப்போட்டு,சிறிது மாவை அதில் சேர்த்து எண்ணையில் பிழியவும்.
இரண்டு பக்கமும் நன்றாக வெந்ததும் எடுக்கவும்.
7 comments:
தீபாவளி ஸ்பெஷல் குறிப்புகள் அருமை. நன்றி.
ok... thanks... from new android...
@
ராமலக்ஷ்மி.
நன்றி ராமலக்ஷ்மி.
தீபாவளி ஸ்பெஷல் இனிப்பு, காரம் மிக அருமை.
நீங்க சொன்னதுலாம் செஞ்சு சாப்பிட இன்சூரன்ஸ் பாலிசி எதுவும் தேவைப்படுமா?
அப்படியே லேட்டஸ்ட் டிரெண்ட்படி,"ஊதாகலர் "ரிப்பன் பக்கோடா செய்முறையும் சொல்லி இருக்கலாம் :-))
@
திண்டுக்கல் தனபாலன்
Thanks
திண்டுக்கல் தனபாலன்
@
கோமதி அரசு
Thanks கோமதி அரசு.
Post a Comment