தேவையானவை:
நிலக்கடலை 1 கப்
வெள்ளரிக்காய் 1
தக்காளி 2
மிளகுதூள் 1 தேக்கரண்டி
Chat மசலா 1/2 தேக்கரண்டி
எலுமிச்சம்பழம் 1
கொத்தமல்லித்தழை சிறிதளவு
உப்பு தேவையானது
------
செய்முறை:
நிலக்கடலையை இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து தேவையான உப்பு சேர்த்து குக்கரில் வைக்கவும்.(3 விசில்)
குக்கரில் இருந்து எடுத்து வடிகட்டி ஒரு அகண்ட பாத்திரத்தில் போடவும்.
அதனுடன் பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய்,தக்காளி,மிளகுதூள்,chat மசாலா,தேவையான உப்பு சேர்த்து கலக்கவும்.
கடைசியில் எலுமிச்சம்பழத்தை பிழிந்து .கொத்தமல்லித்தழையை தூவவேண்டும்.
' சுண்டல் சாலட்' ஐ மாலை வேளை டிபனுக்கும் செய்யலாம்.
9 comments:
அருமை..!
Thanks இராஜராஜேஸ்வரி.
சுவையான சுண்டல் சாலட்... நன்றி...
வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.
அருமையான சுண்டல் சாலட்.
வருகைக்கு நன்றி கோமதி அரசு.
உங்கள் செய்முறைக் குறிப்புகள் எல்லாம் மிகச் சுலபாமாக செய்யக்கூடியவையாக உள்ளன. செய்து சாப்பிடுவோம்
செய்து பாருங்கள்.மிகவும் சுவையாக இருக்கும்.வருகைக்கு நன்றி.
சுண்டல் சாலட் அருமை..
Post a Comment