தேவையானவை:
புட்டு மாவு 2 கப்
மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
உப்பு ஒரு சிட்டிகை
பொடித்த வெல்லம் 1 1/2 கப்
தேங்காய் துருவல் 1 கப்
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
நெய் 1 மேசைக்கரண்டி
முந்திரிபருப்பு 10
-----
செய்முறை:
புட்டு மாவை குக்கரில் வைக்கும் ஒரு பாத்திரத்தில் வைத்து மஞ்சள்தூள், சிட்டிகை உப்பு சேர்த்து வெதுவெதுப்பான தண்ணீரில் நன்றாக பிசறி ஆவியில் பத்து நிமிடம் வைத்து எடுக்கவேண்டும்.
அடுப்பில் வாணலியை வைத்து அரை கப் தண்ணீரில் வெல்லத்தை கம்பிப் பாகு வரும் வரை காய்ச்சவேண்டும்.
அதில் குக்கரில் இருந்து எடுத்த புட்டு மாவை சேர்த்து நன்கு கட்டி தட்டாமல் கிளறவேண்டும்.
அதனுடன் நெய்யில் வறுத்த தேங்காய் துருவல்,முந்திரிபருப்பு,ஏலக்கய் தூள் மூன்றையும் சேர்த்து கிளற உதிரி உதிரியாக வரும்.
சுவையான ' நவராத்திரி புட்டு' ரெடி.
(புட்டு மாவு கடைகளில் கிடைக்கும்)
11 comments:
சுவையான நவராத்திரி புட்டு செய்முறைக்கு நன்றி...
புட்டு செய்முறை குறிப்பு குறித்து பதிவிட்டமைக்கு நன்றி
ஆவியில வேக வச்ச புட்டு உடம்புக்கு நல்லது
@ திண்டுக்கல் தனபாலன்
நன்றி. திண்டுக்கல் தனபாலன்.
@ Viya Pathy
வருகைக்கு நன்றி Viya Pathy.
// ராஜி said...
ஆவியில வேக வச்ச புட்டு உடம்புக்கு நல்லது//
ஆம்.
வருகைக்கு நன்றி ராஜி.
அருமை.
நவராத்திரி வாழ்த்துகள்!
வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி
நவராத்திரி வாழ்த்துகள்!
சுவையான புட்டு குறிப்புக்கு நன்றி.
Thanks Aadhi.
செய்முறை விளக்கமும்,புட்டும் அருமை.நவராத்திரி வாழ்த்துக்கள்.
Post a Comment