Friday, May 30, 2014

முருங்கைக்கீரை பொரியல்

தேவையானவை:

முருங்கைக்கீரை 2 கப் (பொடியாக நறுக்கியது)
தேங்காய் துருவல்1 கப்
பச்சைமிளகாய் 2
மிளகு 1 தேக்கரண்டி
சீரகம்1 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு1 தேக்கரண்டி
கடலைபருப்பு1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல்2
பெருங்காயத்தூள் 1/2 தேக்கரண்டி


செய்முறை:

நறுக்கிய முருங்கைக்கீரையை நன்றாக அலசி வெதுவெதுப்பான நீரில் ஐந்து நிமிடம் வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து பொடியாக நறுக்கிய பச்சைமிளகாயை வதக்கவும்.
முருங்கைக்கீரையை பிழிந்து இதனுடன் சேர்த்து வதக்கவேண்டும்.தேவையான உப்பையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
கீரை வெந்ததும் சீரகத்தை அப்படியே பச்சையாகவும் மிளகை பொடித்தும் சேர்க்கவும்.
இறக்குவதற்கு முன்பு தேங்காய் துருவலை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி இறக்கவும்.
வேண்டுமென்றால் வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்க்கலாம்.:

Sunday, May 25, 2014

ஃபிரஞ்ச் ஃப்ரை


தேவையானவை:

உருளைக்கிழங்கு  4
மிளகுத்தூள் 1 மேசைக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
-------

செய்முறை:

உருளைக்கிழங்கை தோலுரித்து நீட்டவாக்கில் நறுக்கவும்.
நறுக்கிய உருளைத் துண்டுகளை ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு freezer ல் வைக்கவும்.
அரை மணி நேரம் கழித்து freeezer ல் இருந்து எடுத்து அடுப்பில் எண்ணெய் வைத்து மிதமான சூட்டில் பொரிக்கவும்.
பொரித்ததை .கிச்சன் டவலால் எல்லாவற்றையும் நன்கு துடைத்து விட்டு மீண்டும் பொரிக்கவும்.
இதனுடன் உப்பு,மிளகுத்தூள் சேர்க்கவும்.

Thursday, May 22, 2014

போண்டா



தேவையானவை:

உளுத்தம்பருப்பு 1 கப்
அரிசிமாவு 1 மேசைக்கரண்டி
-----
மிளகு 1 மேசைக்கரண்டி
இஞ்சி 1 துண்டு
தேங்காய் சிறிய துண்டுகளாக 10
பெருங்காயத் தூள் 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
கொத்தமல்லித்தழை சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
-----
செய்முறை:


உளுத்தம்பருப்பை இரண்டுமணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
பின்னர் வடிகட்டி நைசாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரைத்த உளுந்த மாவு,அரிசிமாவு,மிளகு,பொடியாக நறுக்கிய இஞ்சி,தேங்காய் துண்டுகள்,பெருங்கயத்தூள்,கறிவேப்பிலை,பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தேவையான உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.

வாணலியில் தேவையான எண்ணெய் வைத்து பிசைந்த மாவை உருண்டைகளாக போட்டு எடுக்கவும்.
இந்த போண்டாவை தக்காளி சட்னியுடன் சாப்பிட ருசியாக இருக்கும்

Sunday, May 18, 2014

கேப்சிகம் கோசுமல்லி




தேவையானவை:

குடமிளகாய் 2
பயத்தம்பருப்பு 1/4 கப்
தேங்காய் துருவல் 1/4 கப்
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை 1 கொத்து
உப்பு,எண்ணெய் தேவையானது

செய்முறை:


குடமிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
பயத்தம்பருப்பை தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் சேர்த்து கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிக்கவும்.
பொடியாக நறுக்கிய குடமிளகாயை சேர்த்து வதக்கவும்.
ஊறவைத்த பயத்தம்பருப்பை வடிகட்டி இதனுடன் சேர்த்து வதக்கவும்.
 குடமிளகாய் நன்கு வதங்கிய பின் தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்குவதற்கு முன்பு தேங்காய் துருவலை தூவி இறக்கவும்.

Sunday, May 11, 2014

மொகல் வெஜ் பிரியாணி



தேவையானவை:

பாசுமதி அரிசி 1 கப்
பீன்ஸ்  10
காரட் 2
உருளைக்கிழங்கு 2
தக்காளி 4
வெங்காயம் 2
இஞ்சி பூண்டு விழுது 2 தேக்கரண்டி
தயிர் 1/2 கப்
மிளகாய் தூள் 1 மேசைக்கரண்டி
தனியா தூள் 1 மேசைக்கரண்டி
மசாலா தூள் 1 மேசைக்கரண்டி
புதினா 1/4 கப்
கொத்தமல்லி தழை 1/2 கப்
உப்பு,எண்ணெய் தேவையானது
------
தாளிக்க:
பட்டை ஒரு துண்டு
லவங்கம் 2
பிரிஞ்சி இலை 1
-------
செய்முறை:


பீன்ஸ்,காரட்,உருளைக்கிழங்கு மூன்றையும் நீட்டவாக்கில் நறுக்கிக்கொள்ளவேண்டும்.
வெங்காய்ம்,தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்லவேண்டும்.
--------
பாசுமதி அரிசியை 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும
அரிசியை கொதிக்கும் தண்ணீரில் (இரண்டு கப்) போட்டு அடுப்பில் வைத்து ஐந்து நிமிடம் கழித்து அடுப்பை அணைக்க வேண்டும்.
அரிசி முக்கால் பதத்துக்கு வெந்துவிடும். தண்ணீர் இல்லாமல் வடிகட்டி தனியே எடுத்து வைக்கவும்.
-----
கடாயில் எண்ணெய் வைத்து பட்டை,லவங்கம்,பிரிஞ்சி இலை தாளித்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவேண்டும்.
அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவேண்டும்.(முடிந்தால் இஞ்சியை தனியாகவும்,பூண்டு தனியாகவும் அரைத்து சேர்க்கலாம்)
பிறகு தக்காளி வதக்கி அதனுடன் நறுக்கி வைத்த காய்கறிகளை சேர்க்க வேண்டும்.
காய்கறிகள் நன்றாக வெந்ததும் தேவையான உப்பும்,,மிளகாய் தூள், தனியா தூள்,கரம் மசாலா தூள் மூன்றையும் சேர்த்து வதக்கவேண்டும்.
கலவைகெட்டியாக வந்ததும் வடித்த சாதத்தை போட்டு சிறிது கிளறி  அடுப்பை அணைத்து விட்டு தயிர், கொத்தமல்லித்தழை,புதினா சேர்த்து நன்றாக கிளறவேண்டும்.

தம் கட்டுதல்:
பிரியாணியை ஒரு அகண்டை பாத்திரத்தில் வைத்து ஒரு தட்டு போட்டு மூடவேண்டும்.
பாத்திரத்துக்கும் தட்டுக்கும் இடைவெளி இல்லாமல் ஈரத்துணியால் மூடி  துணியை முறுக்கிவிட்டு தட்டு மேல் ஏதாவது வெயிட்டான பொருளை வைக்கவும்.
சிறிது நேரம் கழித்து திறந்து பார்த்தால் சுவையான மொகல் வெஜ் பிரியாணி ரெடி.

Monday, May 5, 2014

எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு




தேவையானவை:

சின்ன கத்திரிக்காய் 12                
புளி எலுமிச்சைஅளவு
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் 2 மேசைக்கரண்டி
சாம்பார் பொடி 2 மேசைக்கரண்டி
உப்பு தேவையானது                                    
-------
வறுத்து அரைக்க தேவையானது:
சின்ன வெங்காயம் 10
வற்றல் மிளகாய் 7
துருவிய தேங்காய் 1/2 கப்
வேர்க்கடலை 10
சீரகம் 1 தேக்கரண்டி
வெந்தயம் 1/2 தேக்கரண்டி
கசகசா 1 தேக்கரண்டி
பெருங்காயம் 1 துண்டு
உப்பு சிறிதளவு
--------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
வெந்தயம் 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
-------
செய்முறை:
சின்ன கத்திரிக்காயை குறுக்கே வெட்டிக்கொள்ளவும்

                     குறுக்கே வெட்டிய கத்திரிக்காய்




வறுத்து அரைக்கக் கொடுத்துள்ளவைகளில் வெங்காயத்தை சிறிது எண்ணெயில் பொன்னிறமாக வறுக்கவும்.
கசகசாவை தனியே வெறும் வாணலியில் வறுக்கவும்.
மற்றவற்றை எண்ணெயில் வறுக்கவும்.
எல்லாவற்றையும் சிறிது உப்பு,தண்ணீர் சேர்த்து கெட்டியான விழுது போல் அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த விழுதை குறுக்கே வெட்டிய ஒவ்வொரு கத்திரிக்காயின் உள்ளும் அடைத்து மேலே கொஞ்சம் எண்ணெய் தடவவும்.
அப்படியே வாணலியில் சிறிது எண்ணெய் வைத்து வதக்கலாம்.
இல்லாவிடில் Oven ஐ Preheat செய்து விட்டு 25 நிமிடம் வைக்கவும்.(425deg.-F)(இந்த முறையில் செய்தால் கத்திரிக்காய் மொறு மொறு என்று இருக்கும்.) இதனை தனியே எடுத்து வைக்கவும்.


                        Oven ல் வைத்து எடுத்த கத்திரிக்காய்




                   
                                 எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு  


                           
அடுப்பில் நல்லெண்ணய்  வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து புளித்தண்ணீரில் மீதியுள்ள அரைத்த விழுதை கரைத்து
உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.மஞ்சள்தூள்,சாம்பார் பொடி சேர்க்கவும்.நன்கு கொதித்ததும் வதக்கிய கத்திரிக்காயை சேர்த்து
இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...