தேவையானவை:
பயத்தம்பருப்பு 1 கப்
துருவிய தேங்காய் 1 கப்
ஏலக்காய் 5
பொடித்த வெல்லம் 1 கப்
வெல்லப்பாகில் உருட்டியது
-----
அரிசி மாவு 2 கப்
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
உப்பு சிறிதளவு
எண்ணெய் பொரிக்க தேவையானது
-----
செய்முறை: முந்திரிக் கொத்து
பயத்தம்பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவேண்டும்.
ஏலக்காயை தோலுடன் வறுத்து தோலை எடுக்கவேண்டும்.
தேங்காய் துருவலையும் நன்றாக வறுத்துக்கொள்ளவேண்டும்.
மூன்றையும் மிக்சியில் பொடி செய்துகொள்ளவேண்டும்.
-------
வெல்லத்தை கால் கப் தண்ணீருடன் அடுப்பில் வைத்து வெல்லம் நன்றாகக் கரைந்து சிறிது கொதித்தவுடன் அரைத்து வைத்துள்ள பொடியை அதில் சேர்த்து நன்றாகக் கிளறி உடனே சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்துக்கொள்ளவும்.
------
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரிசிமாவு,மஞ்சள்தூள்,உப்பு (ஒரு சிட்டிகை) சேர்த்து தண்ணீர் விட்டு பிசைய வேண்டும் கரைத்த மாவு .பஜ்ஜி மாவு பதத்தில் இருக்கவேண்டும்.
-----
வாணலியில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் உருட்டி வைத்த உருண்டைகளை ஒவ்வொன்றாக மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுக்கவேண்டும்.
4 comments:
அருமையான முந்திரி கொத்து மூன்று உருண்டைகளை சேர்த்து மாவில் முக்கி போட்டு எடுப்பார்கள் முந்திரி கொத்துக்கு திருநெல்வேலியில்.
நான் ஒவ்வொரு உருண்டையாகத்தான் மாவில் முக்கி போட்டு எடுத்தேன்.வருகைக்கு நன்றி கோமதி அரசு.
அருமையான குறிப்பு.
ஆம், கோமதிம்மா சொல்வது போல செய்வதுண்டு திருநெல்வேலியில். கருப்பட்டிப் பாகிலும் செய்வார்கள்.
தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!
நன்றி ராம்லக்ஷ்மி
Post a Comment