
- தேவையானவை:
- பீன்ஸ் 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
- முட்டைக்கோஸ் 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
- குடமிளகாய் 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
- காலிஃப்ளவர் 10 பூக்கள்
- சிலரி சிறிதளவு
- வெங்காயம் 1/2 கப் (நறுக்கியது)
- spring onion 1/2 கப் (நறுக்கியது)
- -------
- பூண்டு 8 பல்
- இஞ்சி 1 துண்டு
- பச்சைமிளகாய் 4
- சோயா sauce 2 மேசைகரண்டி
- சில்லி பேஸ்ட் 2 மேசைக்கரண்டி
- மிளகு தூள் 1 தேக்கரண்டி
- கார்ன் மாவு 2 மேசைக்கரண்டி
- vegetable stock 1/2 கப்
- ------செய்முறை:மஞ்சூரியன் செய்யும் முறை:
- காய்கறிகளை ஒரே அளவில் நறுக்கிகொள்ளவும்.
- கடாயில் சிறிது தண்ணீர் வைத்து எல்லா காய்கறிகளையும் வேகவைக்கவும்.
- ஒரு மஸ்லீன் துணியில் காய்கறிகளை வடிகட்டவும்.
- வடிந்த தண்ணீரை veg.stock ஆக பயன்படுத்தலாம்.
- -------
- வாணலியில் எண்ணைய் வைத்து பூண்டு,இஞ்சி,பச்சைமிளகாய்,சோயா sauce,சில்லி
- பேஸ்ட்,மிளகு தூள்,கார்ன் மாவு எல்லாவற்றிலும் பாதி அளவு எடுத்து இதில்
- சேர்த்து நன்கு வதக்கவும்.காய்கறிகளையும் (வெங்காயம் தவிர்த்து) இதனுடன்
- சேர்த்து வதக்கவும்.உப்பு சேர்க்கவும்.ஆறினவுடன் சிறு சிறு உருண்டைகளாக
- உருட்டி எண்ணையில் பொறித்து எடுக்கவும்.
- GRAVY செய்யும் முறை

- கடாயில் எண்ணைய் வைத்து பொடியாக நறுக்கிய வெங்காயம் மீதமுள்ள
- பூண்டு,இஞ்சி,பச்சைமிளகாய்,மிளகு தூள்,சில்லி பேஸ்ட்,சோயா sauce சேர்த்து
- வதக்கவும்.சிறிது உப்பு சேர்க்கவும்.
- ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் ஒரு மேசைக்கரண்டி கார்ன் மாவை ஒரு
- கப் தண்ணீரில் கரைக்கவும்.சிறிது கொதிக்கவைக்கவும்.இந்த கரைசலை
- கடாயில் உள்ள வெங்காயம்,பூண்டு மிக்சரில் சேர்க்கவும்.தயாராக உள்ள
- பொறித்த மஞ்சூரியன் உருண்டைகளை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவைத்து
- இறக்கவும்.
- நூடுல்ஸ்,சாதம் இரண்டோடும் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
Do not look behind, look always in front,at what you want to do - and you are sure of progressing - Annai Mira
Monday, August 15, 2011
வெஜ் சைனீஸ் மஞ்சூரியன்
Monday, August 8, 2011
அரைப்புளி குழம்பு
தேவையானவை:
சேனைக்கிழங்கு 1/4 கிலோ
கொண்டக்கடலை 1 கப் (channa)புளி ஒரு எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி 3 மேசைக்கரண்டி
தேங்காய் துண்டுகள் 1/4 கப்
அரிசிமாவு 1 டீஸ்பூன்
எண்ணைய், உப்பு தேவையானது
------
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
பெருங்காயம் 1 துண்டு
மிளகாய் வற்றல் 3
கறிவேப்பிலை 1 கொத்து
-----செய்முறை:
சன்னாவை நான்கு மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.
சேனைக்கிழங்கை தோல் சீவிவிட்டு சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
அடுப்பில் கனமான பாத்திரத்தை வைத்து அதில் ஒரு குழிக்கரண்டி நல்லெண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுத்தம்பருப்பு,பெருங்காயம்,மிளகாய் வற்றல்,
இவைகளுடன் கொண்டக்கடலையையும் போட்டு சிவக்க வறுக்கவும்.பின்னர் தேங்காய் துண்டங்களையும் போட்டு சற்று வறுத்து கறிவேப்பிலையை சேர்த்து
வெடிக்கவிடவும்.வெடித்ததும் சாம்பார் பொடி போட்டு வறுக்கவும்.
பின்னர் புளியை கெட்டியாக கரைத்து விட்டு உப்பு சேர்த்து நறுக்கிய சேனைக்கிழங்கு துண்டுகளை சேர்க்கவும்.
நன்றாக கொதித்து வற்றியவுடன் அரிசிமாவை சிறிது தண்ணீரில் கரைத்து விட்டு எல்லாம் சேர்ந்து கொதித்தபின் இறக்கவும்.
வேண்டுமென்றால் அப்பளத்தை சிறு துண்டுகளாக்கி பொரித்து போடலாம்.
Wednesday, August 3, 2011
நவரத்ன குருமா
.
தேவையானவை:
காரட் 1/4 கப்
பீன்ஸ் 1/4 கப்
உருளைக்கிழங்கு 1/4 கப்
பச்சைப் பட்டாணி 1/4கப்
பனீர் துண்டுகள் 10
முந்திரி 5
வெங்காயம் 2
தக்காளி 2
மஞ்சள் தூள்,மிளகாய் பொடி,தனியா பொடி,garam masala
ஒவ்வொன்றும் ஒரு டீஸ்பூன்.
தேங்காய் பால் 1 கப்
தயிர் or cream 1/2 கப்
எண்ணைய்,உப்பு தேவையானது.
பொடி செய்ய:
சோம்பு 1 டீஸ்பூன்
தனியா 1 டீஸ்பூன்
மிளகு 1 டீஸ்பூன்
பட்டை சிறு துண்டு
ஏலக்காய் 2
Paste பண்ண:
பச்சை மிளகாய் 4
இஞ்சி ஒரு துண்டு
பூண்டு 4
செய்முறை:
முதலில் பீன்ஸ்,காரட்,உருளைக்கிழங்கு மூன்றையும் பொடியாக நறுக்கி பச்சை பட்டாணியுடன் சேர்த்து வதக்கி நன்றாக வெந்தவுடன் தனியே எடுத்துவைக்கவும்.
பனீர் துண்டுகளை எண்ணையில் பொரித்து எடுக்கவும்.
பொடி செய்ய கொடுத்துள்ளவைகளை நன்றாக எண்ணையில் வறுத்து பொடி பண்ணவும்.
பச்சைமிளகாய்,இஞ்சி,பூண்டு மூன்றையும் விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் சிறிது எண்ணைய் விட்டு வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.வெங்காயம் நன்றாக வெந்ததும் நறுக்கிய தக்காளியைப்போட்டு
வதக்கவும்.பொடிபண்ணிய பவுடரையும்,paste யும் போட்டு சிறிது வதங்கிய வுடன் மஞ்சள்தூள்,மிளகாய் தூள்,தன்யா பொடி மூன்றையும் சேர்க்கவும்.இந்த கலவையில்
வெந்த காய்கறிகளையும் சிறிது தண்ணீரும்,உப்பும் சேர்த்து நன்றாகக்கலந்து கொதிக்கவக்கவும்.
தேங்காய்பால்,தயிர் இரண்டையும் சேர்த்து ஒரு நிமிடம் வைத்து இறக்கவும்.அடுப்பை அணைக்கும் முன் பனீர் துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறவும்.
கடைசியில் வறுத்த முந்திரியை சேர்க்கவும்.Thursday, July 28, 2011
ரவா பொங்கல்
தேவையானவை:
ரவா 1 கப்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
---
பயத்தம்பருப்பு 1/4 கப்
இஞ்சி ஒரு சிறிய துண்டு
பச்சைமிளகாய் 2
மிளகு 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் 1 டேபிள்ஸ்பூன்
நெய் 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
முந்திரிபருப்பு 10
உப்பு,எண்ணைய் தேவையானது
---
செய்முறை:
பயத்தம்பருப்பை ஒரு கப் தண்ணீரில் மஞ்சள்தூள்,பெருங்காய்த்தூள் சேர்த்து வேகவைக்கவேண்டும். பருப்பு நன்கு குழைய வேண்டும்.குக்கரிலும் வைக்கலாம். 4 விசில் விடவேண்டும்.
ஒரு கடாயை எடுத்துக்கொண்டு ஒரு டேபிள்ஸ்பூன் நெய்,ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணைய் விட்டு முதலில் மிளகை பொறிக்கவேண்டும். பின்னர் சீரகத்தை பொறித்து அதனுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி,பச்சைமிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவேண்டும்.தயாராக உள்ள பயத்தம்பருப்பை இதனுடன் சேர்த்து கிளறவேண்டும்.
இன்னொரு அடுப்பில் இரண்டு கப் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் கொதிக்கவிடவேண்டும். தண்ணீர் கொதித்தவுடன் பயத்தம்பருப்பு கலவையுடன் உப்புடன் சேர்த்து கிளறவேண்டும்.
ரவையை பரவலாக கட்டித் தட்டாமல் தூவிக்கொண்டே கிளறவேண்டும்,பயத்தம்பருப்பும் ரவையும் நன்றாக சேர்ந்து வந்தபின் அடுப்பை அணைத்து வறுத்த முந்திரியை போடவேண்டும்.
ரவா 1 கப்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
---
பயத்தம்பருப்பு 1/4 கப்
இஞ்சி ஒரு சிறிய துண்டு
பச்சைமிளகாய் 2
மிளகு 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் 1 டேபிள்ஸ்பூன்
நெய் 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
முந்திரிபருப்பு 10
உப்பு,எண்ணைய் தேவையானது
---
செய்முறை:
பயத்தம்பருப்பை ஒரு கப் தண்ணீரில் மஞ்சள்தூள்,பெருங்காய்த்தூள் சேர்த்து வேகவைக்கவேண்டும். பருப்பு நன்கு குழைய வேண்டும்.குக்கரிலும் வைக்கலாம். 4 விசில் விடவேண்டும்.
ஒரு கடாயை எடுத்துக்கொண்டு ஒரு டேபிள்ஸ்பூன் நெய்,ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணைய் விட்டு முதலில் மிளகை பொறிக்கவேண்டும். பின்னர் சீரகத்தை பொறித்து அதனுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி,பச்சைமிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவேண்டும்.தயாராக உள்ள பயத்தம்பருப்பை இதனுடன் சேர்த்து கிளறவேண்டும்.
இன்னொரு அடுப்பில் இரண்டு கப் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் கொதிக்கவிடவேண்டும். தண்ணீர் கொதித்தவுடன் பயத்தம்பருப்பு கலவையுடன் உப்புடன் சேர்த்து கிளறவேண்டும்.
ரவையை பரவலாக கட்டித் தட்டாமல் தூவிக்கொண்டே கிளறவேண்டும்,பயத்தம்பருப்பும் ரவையும் நன்றாக சேர்ந்து வந்தபின் அடுப்பை அணைத்து வறுத்த முந்திரியை போடவேண்டும்.
ரவா பொங்கலுக்கு பொருத்தமான side dish தேங்காய் சட்னி.
Friday, July 22, 2011
தேங்காய் பால் குருமா
தேவையானவை:
தேங்காய் பால் 2 கப்
உருளைக்கிழங்கு 2
சின்ன வெங்காயம் 10
காரட் 2
தக்காளி 2
தண்ணீர் 1/4 கப்
அரைக்க:
தேங்காய் துருவியது 2 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கடலை 1/4 கப்
முந்திரிபருப்பு 10
பச்சைமிளகாய் 2
கசகசா 1 டீஸ்பூன்
தாளிக்க:
பட்டை,லவங்கம்,சோம்பு எல்லாம் சிறிதளவு.
செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
தேங்காய் பால் 2 கப்
உருளைக்கிழங்கு 2
சின்ன வெங்காயம் 10
காரட் 2
தக்காளி 2
தண்ணீர் 1/4 கப்
அரைக்க:
தேங்காய் துருவியது 2 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கடலை 1/4 கப்
முந்திரிபருப்பு 10
பச்சைமிளகாய் 2
கசகசா 1 டீஸ்பூன்
தாளிக்க:
பட்டை,லவங்கம்,சோம்பு எல்லாம் சிறிதளவு.
செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோலுரித்துக்கொள்ளவும்.
காரட்,தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கக்ிகொள்ளவும்.
அரைக்கக்கொடுத்துள்ள பொருட்களை விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்கவேண்டிய பொருட்களை வறுக்கவும்.
பின்னர் சின்ன வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
அதனுடன் நறுக்கிய உருளைக்கிழங்கு,காரட்,தக்காளி,தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
அரைத்த விழுதுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
கடைசியாக தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
இந்த குருமா இட்லி,தோசை,சப்பாத்தி ஆகியவற்றிற்கு சிறந்த side
Sunday, July 10, 2011
ஒக்காரை
தேவையானவை:
பயத்தம்பருப்பு 1 கப்
வெல்லம் (பொடித்தது) 1 1/2 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
நெய் 1/4 கப்
ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்
முந்திரி பருப்பு 10
செய்முறை:
பயத்தம்பருப்பை ஒரு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி நைசாக அரைக்கவேண்டும்.
அரைத்த விழுதை இட்லி தட்டில் ஆவியில் 15 நிமிடம் வைத்து எடுக்கவேண்டும்.
நன்றாக ஆறிய பின் மிக்சியில் பொடிக்கவேண்டும்.
வெல்லத்தை சிறிது தண்ணீர் வைத்து கரைந்ததும் வடிகட்டி அடுப்பில் வைத்து கம்பிப்பதம் வந்ததும்
பொடித்து வைத்துள்ள பயத்தம்பருப்பு தூள்,தேங்காய் துருவல் இரண்டையும் தூவி நன்கு கிளறவேண்டும்.
பின்னர் நெய் ஊற்றி கிளற உதிரியாக வரும்.
முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து சேர்க்கவேண்டும்.
பயத்தம்பருப்பு 1 கப்
வெல்லம் (பொடித்தது) 1 1/2 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
நெய் 1/4 கப்
ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்
முந்திரி பருப்பு 10
செய்முறை:
பயத்தம்பருப்பை ஒரு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி நைசாக அரைக்கவேண்டும்.
அரைத்த விழுதை இட்லி தட்டில் ஆவியில் 15 நிமிடம் வைத்து எடுக்கவேண்டும்.
நன்றாக ஆறிய பின் மிக்சியில் பொடிக்கவேண்டும்.
வெல்லத்தை சிறிது தண்ணீர் வைத்து கரைந்ததும் வடிகட்டி அடுப்பில் வைத்து கம்பிப்பதம் வந்ததும்
பொடித்து வைத்துள்ள பயத்தம்பருப்பு தூள்,தேங்காய் துருவல் இரண்டையும் தூவி நன்கு கிளறவேண்டும்.
பின்னர் நெய் ஊற்றி கிளற உதிரியாக வரும்.
முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து சேர்க்கவேண்டும்.
Monday, July 4, 2011
அவரைக்காய் பொரியல்
தேவையானவை: அவரைக்காய் 1/4 கிலோ
தேங்காய் துருவல் 1 டேபிள்ஸ்பூன்பச்சைமிளகாய் 2
பொட்டுக்கடலை 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
----
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
செய்முறை:
அவரைக்காயின் நாரை அகற்றிவிட்டு பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு microwave bowl ல் நறுக்கியதை போட்டு தேவையான உப்பும்,சிறிது தண்ணீரும் சேர்த்து "H" ல் ஐந்து நிமிடம்
வைத்தால் போதும் வெந்துவிடும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணையில் கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளித்து வேகவைத்த
அவரைத்துண்டுகளை சேர்த்து வதக்கவேண்டும்.
தேங்காய் துருவல்,பச்சைமிளகாய்,பொட்டுக்கடலை மூன்றையும் தண்ணீர் விடாமல் பொடி பண்ணி இதனுடன்
சேர்த்து ஒரு பிரட்டு பிரட்ட வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)
36 எரிசேரி
தேவையானவை: சேனைக்கிழங்கு 1 கப் நறுக்கிய துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...
-
மதுரையில் பிரசித்திபெற்ற குளிர்பானம் தேவையானவை: பால் 4 கப் பாதாம் பிசின் 1 டேபிள்ஸ்பூன் நன்னாரி சிரப் 1 டேபிள்ஸ்பூன் அல்லது ரோஸ் எஸன...
-
தேவையானவை: சாதம் 1 கப் கடலைமாவு 1/2 கப் வெங்காயம் 1 இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 2 கொத்தமல்லித்தழை சிறிதளவு கறிவேப்பிலை 1 கொத்து உ...
-
கல்கியில் வெளியான "பாரம்பரிய சமையல்" மெகா போட்டியில் எனது "குடலை இட்லி " என்ற சமையல் குறிப்பு தேர்ந்தெடுக்க பட்ட...
