Friday, June 20, 2008

பால் கொழுக்கட்டை

தேவையானவை:

1.பச்சரிசி 1/2 கப்
2.புழுங்கலரிசி 1 கப்
3.தேங்காய் 1
4.பொடித்த வெல்லம் 250 gm.
5.ஏலக்காய் பொடி 2 டீஸ்பூன்
6.உப்பு சிறிதளவு

செய்முறை:

1.இரண்டு அரிசிகளையும் ஊறவைத்துக்கொள்ளவும்.
அத்துடன் கொஞ்சம் உப்பு சேர்த்து தண்ணிர் ஊற்றி கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி காகிதத்தில் உலர வைக்கவும்
2.தேங்காயை துருவி பால் எடுத்துக்கொள்ளவும்.
3.வெல்லத்தை தண்ணீரில் கரைத்து,வடிகட்டி மிதமான தீயில் வைக்கவும்.
உலர வைத்துள்ள கொழுக்கட்டை உருண்டைகளை வெல்லப்பாகில் போடவும்.
தேங்காய்பால்,ஏலக்காய் பொடி சேர்க்கவும்.
நன்றாக வெந்ததும் எடுத்து சாப்பிடலாம்

1 comment:

வடுவூர் குமார் said...

ஹூம்! நாக்கில் எச்சில் ஊருது,சாப்பிட்டு எவ்வளவு வருடங்கள் ஆகிவிட்டது!!
கடலைப்பருப்பு போட்ட அடை பற்றி கண்ணில் படவில்லையே?

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...