Friday, January 2, 2009

பலாக்கொட்டை பகோடா

தேவையானவை:

பலாக்கொட்டை 20
வெங்காயம் 3
பச்சைமிளகாய் 6
பூண்டூ 4 பல்
நெய் ஒரு டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து
உப்பு,எண்ணைய் தேவையானது

செய்முறை:

பலாக்கொட்டைகளை நன்றாகக்கழுவி குக்கரில் போட்டு வேகவைக்கவேண்டும்.நன்றாக வெந்தவுடன் தோலை உரித்து அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய்,பூண்டு,தேவையான உப்பு எல்லாவற்றையும் மிக்ஸீயில் போட்டு வடைக்கு அரைப்பதுபோல கெட்டியாக அரைக்கவேண்டும்.அத்துடன் நெய் ,கறிவெப்பிலைசேர்த்து வாணலியில் எண்ணைய் வைத்து காய்ந்த பிறகு சாதாரண பக்கோடாவிற்கு போடுவதுபோல் உதிரி உதிரியாக போட்டு பொன்னிறமாக வந்தவுடன் எடுக்கவேண்டும்

3 comments:

cheena (சீனா) said...

ஆகா - நான் இதுவரை கேள்விப்பட்டதே இல்லையே - நல்லாருக்கும் போல இருக்கெ - செய்யச் சொல்லிடுவோம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

varukaikku nanRi
cheena (சீனா)

கோவி.கண்ணன் said...

அம்மா,
நானும் கேள்வி பட்டதில்லை, அடுத்த தடவை வரும் போது... சீசன் இருந்தால் சாப்பிட்டுப் பார்க்கிறேன்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...