Tuesday, September 1, 2009

அவல் உப்புமா


தேவையானவை:

அவல் 1கப்
பச்சைமிளகாய் 2
மஞ்சள்பொடி 1 டீஸ்பூன்
----
வெங்காயம் 1
உருளைக்கிழங்கு 1
எலுமிச்சம்பழம் 1
கொத்தமல்லித்தழை சிறிதளவு
----
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1டீஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து
----
செய்முறை:

1.அவலை தண்ணீரில் நன்றாகக் களைந்து வடிகட்டிவைக்கவும்.
கெட்டி அவல் என்றால் 10 நிமிடம் ஊற வைத்து வடிகட்டவும்.
2.வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
3.உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.
----
1.வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து பொடியாக நறுக்கிய
வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
பச்சைமிளகாயை குறுக்காக வெட்டி சேர்த்து வதக்கவும்.
2.அவலை நன்றாக பிழிந்து அதனுடன் உப்பு,மஞ்சள்பொடி,மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து
வெங்காயம்,பச்சைமிளகாயுடன் கலந்து நன்கு கிளறவும்.
அவல் சீக்கிரத்தில் வெந்துவிடும்.
3.அடுப்பை அணைத்து எலுமிச்சம்பழம் பிழியவும்.
கொத்தமல்லித் தழையை தூவவும்.

2 comments:

கோவி.கண்ணன் said...

காஞ்சனா அம்மா,

சமையல் குறிப்பு நன்று !

அவல் உப்புமாவுக்கு தொட்டுக் கொள்ள எது பொருத்தமானது ?

1. அப்பளம்
2. அரிசி வற்றல்
3. காரத் துவையல்

வேறு எதும் இருந்தால் சொல்லுங்கள்

Kanchana Radhakrishnan said...

என்னுடைய ஓட்டு காரத்துவையலுக்கே!
வருகைக்கு நன்றி கோவி

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...