Wednesday, January 27, 2010

அசோகா அல்வா (Thanjavur Halwa)


தேவையானவை:

பயத்தம்பருப்பு 1 கப்
கோதுமைமாவு 1 கப்
நெய் 1 1/2 கப்
சர்க்கரை 2 கப்
தண்ணீர் 2 1/2 கப்
கேசரிப்பவுடர் 1 டீஸ்பூன்
ஏலப்பொடி 1 டீஸ்பூன்
ஜாதிக்காய் பொடி 1 டீஸ்பூன்
முந்திரிபருப்பு 10

செய்முறை:


ஒரு பாத்திரத்தில் 2 1/2 கப் தண்ணீருடன் பயத்தம்பருப்பை போட்டு குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்தவுடன் இறக்கவும்.
குக்கரில் வெந்த பருப்பை எடுத்து ஒரு வாணலியில் வைத்து அதனுடன் சர்க்கரையை சேர்த்து ..அது கரையும் வரை கிளறவேண்டும்.
இதை அப்படியே தனியாக எடுத்து வைக்கவேண்டும்.

வாணலியில் 1 1/2 கப் நெய் விட்டு,நெய் உருகியவுடன் கோதுமைமாவை தூவவேண்டும்.கூடவே முந்திரிபருப்பை போட்டு
நன்றாக கிளற வேண்டும்.முந்திரிகள் சிவப்பு நிறம் வரும்போது சிறிது தண்ணீர் தெளித்தால் "சொய் "என்று சத்தம் கேட்கும்.
இது தான் பதம்.இறக்கிவைக்கவேண்டும்.

இந்த கலவையோடு பயத்தம்பருப்பு,சர்க்கரை கலவையை சேர்த்து நன்றாக அல்வா பதம்வரை கிளற வேண்டும்.
கடைசியில் கேசரிப்பவுடர்,ஏலப்பொடி,ஜாதிக்காய் பொடி,சேர்க்கவேண்டும்.
(கேசரிப்பவுடரை பாலில் கலந்து விடவும்)

7 comments:

Menaga Sathia said...

அருமையா இருக்கு.எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு இது..

suvaiyaana suvai said...

looks nice!!

Kanchana Radhakrishnan said...

varugaikku nanri suvaiyaana suvai

சிநேகிதன் அக்பர் said...

பார்க்கிறப்பவே சாப்பிடனும் போல இருக்கு.

puduvaisiva said...

"சிறிது தண்ணீர் தெளித்தால் "சொய் "என்று சத்தம் கேட்கும்.
இது தான் பதம்.இறக்கிவைக்கவேண்டும்"

:-))))))))

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி அக்பர்

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி புதுவை சிவா

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...