Sunday, May 2, 2010

மங்களூர் போண்டா


தேவையானவை:

மைதாமாவு 2 கப்
அரிசிமாவு 1/2 கப்
தயிர் 1 1/2 கப்
சீரகம் 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் 5
இஞ்சி 1 துண்டு
சமையல் சோடா ஒரு சிட்டிகை
உப்பு,எண்ணைய் தேவையானது

செய்முறை:

இஞ்சி,பச்சைமிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் தயிர்,நறுக்கிய இஞ்சி,பச்சைமிளகாய்,சீரகம்,ஆப்பசோடா,உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.பிறகு மைதாமாவை போட்டு
கிளறவும்.மைதாமாவு சேர்த்த கலவை கெட்டியாக வரும் போது அரிசிமாவை சேர்க்கவேண்டும்.இப்பொழுது மாவு இன்னும் கெட்டியாக வரும்.பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

வாணலியில் எண்ணைய் வைத்து எண்ணைய் நன்கு காய்ந்ததும் ஸ்லிம்மில் வைத்து போண்டா உருண்டைகளைப் போட்டு பொன் வறுவலாக பொரித்து எடுக்கவும்.

இதற்கு side dish தக்காளி sauce,chilly sauce.

8 comments:

Aruna Manikandan said...

crispy bonda's
Thx. for sharing :-)

Menaga Sathia said...

மிக சுலபமான க்ரிஸ்பி போண்டா அருமை!!

Kanchana Radhakrishnan said...

Thanks Aruna

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Menaga

Jaleela Kamal said...

ஈசி ஸ்னாக்ஸ் சூப்பர்

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Jaleela

Jaleela Kamal said...

காஞ்சனா உங்க்ளுக்கு விருது கொடுத்துள்ளேன் , வந்து பெற்று கொள்ளுஙக்ளே.

Kanchana Radhakrishnan said...

//Jaleela said...
காஞ்சனா உங்க்ளுக்கு விருது கொடுத்துள்ளேன் , வந்து பெற்று கொள்ளுஙக்ளே.//

நன்றி Jaleela

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...