Wednesday, June 16, 2010

உளுந்து சாதமும் எள்ளுத் துவையலும்.


தேவையானவை:

பச்சரிசி 1 கப்
உளுத்தம்பருப்பு 1/4 கப்
தேங்காய் துருவல் 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் 4
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது

தாளிக்க:

கடுகு 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
நெய் 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

பச்சரிசியை சிறிது உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளவும்.
உளுத்தம்பருப்பை வெறும் வாணலியில் சிவப்பாக வரும் வரை வறுத்துக்கொள்ளவும்.
தேங்காய்துருவல்,காய்ந்த மிளகாய்,பெருங்காயம் மூன்றையும் சிறிது எண்ணைய் விட்டு வறுத்துக்கொள்ளவும்.
வறுத்த உளுத்தம்பருப்பு,தேங்காய்துருவல்,காய்ந்த மிளகாய்,பெருங்காயம் நான்கையும் மிக்சியில் பொடி பண்ணிக்கொள்ளவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் வடித்த சாதத்தை பரவலாகக் கொட்டி அதன் மேல் தயாராக உள்ள உளுந்துப்பொடியை உப்புடன் சேர்த்து தூவவும்.
வாணலியில் நெய் வைத்து கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளித்து அதனுடன் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

உளுந்து சாதம் எள்ளுத்துவையலுடன் சேர்ந்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

எள்ளுத்துவையலுக்கு கறுப்பு எள் 1/2 கப்பை தண்ணீரில் அரை மணிநேரம் ஊறவைத்து வடிகட்டி வெறும் வாணலியில் நன்றாக வெடிக்கும் வரை வறுக்கவேண்டும்.
அதனுடன் வறுத்த தேங்காய் துருவல் 1/4 கப்.காய்ந்த மிளகாய் 4,பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன் ,உப்பு சேர்த்து அரைக்கவேண்டும்

10 comments:

Ananya Mahadevan said...

மிக்ஸ் ரைஸ் ஐடியா சூப்பர். ஏன்னா நம்ம வீட்டுல உ.பருப்பு துகையல் உண்டு. அதை நெய் விட்டு சாதத்தோட பிசைஞ்சு சாப்பிடும் வழக்கம் இருக்கு. இருந்தாலும் இந்த ரெடி மேட் ஐடியா ரொம்பவே அருமை.

GEETHA ACHAL said...

ஆஹா...உளுந்து சாதம் சூப்பர்ப்...அதனைவிட எள் துவையல் அருமையோ அருமை...

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி அநன்யா மஹாதேவன்.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Geetha.

Nithu Bala said...

This is very delicious rice..thanks for sharing this..

Anonymous said...

ஆம்மா தாயே! தயவு செய்து பிளாக் டெம்பிளேட்டை மாத்துங்க. அது ஓப்பன் அகிறதுக்குள்ள நான் கூட்டான் சோறு ரெடி பண்ணி சாபிட்டுவிட்டேன். சூப்பர் டெம்பிளேட்டுக்காக ஓட்டு போட்டுள்ளேன்.

மனோ சாமிநாதன் said...

உளுந்து சாதம் அருமை! பக்க உணவாக எள்ளுத் துவையல் மிகவும் பொருத்தம்!!

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Nithu Bala.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Mano.

Kanchana Radhakrishnan said...

Thanks சட்டம் நம்கையில்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...