Wednesday, November 24, 2010

பீட்ரூட் பொரிச்ச கூட்டு

தேவையானவை: பீட்ரூட் 2

பயத்தம்பருப்பு 1/2 கப்

மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்

அரைக்க:

மிளகாய்வற்றல் 4

உளுத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்

பெருங்காயம் 1 துண்டு

மிளகு 1 டீஸ்பூன்

சீரகம் 1 டீஸ்பூன்

நிலக்கடலை 5

தேங்காய் துருவல் 1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை சிறிதளவு



செய்முறை:


பீட்ரூட்டை தோலுரித்து சிறு சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

பயத்தம்பருப்பு,பீட்ரூட்,இரண்டையும் மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரும் வரை வைக்கவும்.

(குக்கரில் முதலில் பயத்தம்பருப்பு அதன்மேல் பீட்ரூட் வைத்தால் பருப்பு நன்றாக வெந்துவிடும்)

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணையில் வறுத்து விழுது போல அரைத்துக்கொள்ளவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக் கொண்டு குக்கரில் இருந்து எடுத்த பயத்தம்பருப்பு,பீட்ரூட் கலவையை உப்புடன்

சேர்த்து கொதிக்கவிடவும்.பின்னர் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கொதித்தவுடன் இறக்கவும்.

தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்

(இதே முறையில் பூசணிக்காய்,சௌ சௌ,கொத்தவரங்காய் போன்ற காய்களிலும் செய்யலாம்.)

6 comments:

Nithu Bala said...

Poricha kootu is my favourite..but have never tried with beets..this is so good..will try this soon and let you know..

Unknown said...

பொரித்த கூட்டு என்றும் இந்த குறிப்பில் சேர்த்து விட்டீர்களானால், "பொரித்த கூட்டு", "பொரிச்ச கூட்டு" (க் இல்லாமல்) செய்முறையை கூகிளில் தேடுபவர்களுக்கு எளிதில் கிடைக்கும். (இப்ப என் கமென்ட் இருப்பதால், சேர்க்கத் தேவையில்லை).

KANA VARO said...

பகிர்வுக்கு நன்றி

Kanchana Radhakrishnan said...

"க்' ஐ எடுத்துவிட்டேன்.
சுட்டிக்காட்டியம்மைக்கு நன்றி கெக்கே பிக்குணி.

Kanchana Radhakrishnan said...

செய்து பாருங்கள்.நன்றாக இருக்கும்.வருகைக்கு நன்றி Nithu.

Menaga Sathia said...

பீட்ரூட்டில் இதுவரை கூட்டு செய்ததில்லை,நன்றாகயிருக்கு...

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...