Wednesday, January 12, 2011

பொங்கலோ பொங்கல்

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்














பால் பொங்கல்

தேவையானவை:

அரிசி 1 கப்
பயத்தம்பருப்பு 1/4 கப்

பால் 5 கப்
சர்க்கரை 1 கப்
ஏலத்தூள் 1 டீஸ்பூன்
நெய் 1 டேபிள்ஸ்பூன்
முந்திரிபருப்பு 10
திராட்சை 10


செய்முறை:

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் பாலை நன்றாக கொதிக்கவைக்கவேண்டும்.

பின்னர் அரிசியையும் பருப்பையும் பாலுடன் சேர்த்து நன்கு கிளறவேண்டும்.

அரிசியும் பருப்பும் நன்றாக வெந்ததும் சர்க்கரையை சேர்க்கவேண்டும்.

சர்க்கரை நன்றாக கரைந்து பொங்கல் பதத்திற்கு வந்தவுடன் இறக்கவும்.ஏலத்தூள் சேர்க்கவும்.

முந்திரிபருப்பு,திராட்சை இரண்டையும் நெய்யில் வறுத்து சேர்க்கவும்



வெண்பொங்கல்



தேவையானவை:



பச்சரிசி 2 கப்

பயற்றம்பருப்பு 1/2 கப்

மிளகு 15

சீரகம் 1 டேபிள்ஸ்பூன்

இஞ்சி 1 துண்டு

முந்திரிபருப்பு 10

நெய் 1/4 கப்

தண்ணீர் 10 கப்

பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்

கருவேப்பிலை ஒரு கொத்து

உப்பு தேவையானது



செய்முறை:








அரிசியையும் பருப்பையும் தனித்தனியாக வாணலியில் எண்ணைய்விடாமல் வறுக்கவும்.(ஒரு புரட்டுபுரட்டினால் போதும்.)

ஒரு அகண்ட அடி கனமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் 10 கப் தண்ணீர் விடவும்.தண்ணீர் நன்கு கொதித்தவுடன் அரிசியையுன் பருப்பையும் நன்றாக களைந்து போட்டு கிளறவும்.பொங்காமல் இருக்க low flame ல் வைத்து க் கிளறவும்.அரிசி ,பருப்பு இரண்டும் நன்றாக வெந்தவுடன் உப்பு போடவேண்டும்.(அரிசி,பருப்பு இரண்டும் குழையாமல் உப்பு போடக்கூடாது.)



மிளகு,சீரகம் இரண்டையும் ஒன்று இரண்டுமாக mixy ல் பொடிபண்ணி சிறிது நெய்யில் பொரித்து சேர்க்கவும்.

இஞ்சியை தோல் நீக்கி பொடிப்பொடியாக நறுக்கி நெய்யில் வதக்கி போடவும்.

பெருங்காயத்தூள்,கருவேப்பிலை இரண்டையும் நெய்யில் பொரித்து போடவும்.முந்திரிப்பருப்பை நெய்யில் பொரித்துப்போடவும்.

கடைசியில் மீதமுள்ள நெய்யை உருக்கி ஊற்றி நன்றாக கிளறி இறக்கவும்.



(அரிசி பருப்பு இரண்டையும் குறிப்பிட்ட அளவு தண்ணீருடன் குக்கரில் வைக்கலாம்.ஆறு விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.அப்பொழுதுதான் நன்றாக குழைவாக இருக்கும்

குக்கரை திறந்தவுடன் உப்பு சேர்த்து மற்றவைகளையும் சேர்த்து கிளறவேண்டும்..)





சர்க்கரை பொங்கல்





தேவையானவை:



பச்சரிசி 1 கப்

பயற்றம்பருப்பு 1/4 கப்

பொடித்தவெல்லம் 1 1/2 கப்

தண்ணீர் 4 1/2 கப்

நெய் 1/4 கப்

பால் 1/2 கப்



ஜாதிக்காய் 1 துண்டு

குங்குமப்பூ 1 டீஸ்பூன்

ஏலக்காய் 4

முந்திரிபருப்பு 10

உலர்ந்த திரட்சை 10

கேசரிப்பவுடர் 1டீஸ்பூன்



செய்முறை:











ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு பயற்றம்பருப்பை எண்ணைய் விடாமல் பொன்னிறமாக வறுக்கவும்.

வெல்லத்தை அரை கப் தண்ணீரில் அடுப்பில் வைத்து கரையவிட்டு வடிகட்டவும்.

பயற்றம்பருப்பை அரிசியுடன் சேர்த்து நன்றாக களைந்து கொள்ளவும்.



ஒரு அகண்ட கனமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் 4 1/2 கப் தண்ணீர் விட்டு,தண்ணீர் நன்கு கொதித்தவுடன் களைந்துவைத்திருந்த அரிசி,பருப்பைப்போட்டு அடிபிடிக்காமல் நன்கு கிளறவும்.அரிசியும் பருப்பும் நன்றாக சேர்ந்து வெந்தவுடன் வடிகட்டிய வெல்லத்தைப்போட்டு medium flame ல் ஒரு பத்து நிமிடம் வைத்து கிளறவும்.



ஒரு கிண்ணத்தில் பாலை எடுத்துக்கொண்டு அதில் கேசரிப்பவுடர்,குங்குமப்பூ,ஏலக்காய் இவற்றைப்போடவும்.ஜாதிக்காய் துண்டை நெய்யில் வறுத்து பொடிசெய்து அதையும் பாலில் சேர்த்து கரைத்து பொங்கலில் சேர்க்கவும் மீதமுள்ள பாலையும் பொங்கலில் சேர்க்கவும்.திராட்சை,முந்திரிபருப்பை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.மீதியுள்ள நெய்யை உருக்கி பொங்கலில் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.

15 comments:

Jaleela Kamal said...

இரண்டு பொங்கலும் சூப்பர்
காஞ்சனா
இனிய பொங்க்ல் வாழ்த்துக்கள்

Menaga Sathia said...

ella pongalum super!! happy pongal....

புவனேஸ்வரி ராமநாதன் said...

இரண்டு பொங்கலும் அருமை. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Kanchana Radhakrishnan said...

.வருகைக்கு நன்றி Jaleela.

Kanchana Radhakrishnan said...

Thanks Menaga.

arasan said...

காலத்திற்கு ஏற்ற பதிவு

நெஞ்சார்ந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள் ...

Asiya Omar said...

பொங்கலோ பொங்கல்,அருமையோ அருமை.பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி.அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Kanchana Radhakrishnan said...

Thanks புவனேஸ்வரி .

Kanchana Radhakrishnan said...

.வருகைக்கு நன்றி அரசன்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

உரிய நேரத்தில்
அருமையான பதிவு .
பகிர்வுக்கு நன்றி .
தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் .

Kanchana Radhakrishnan said...

.வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
நண்டு@நொரண்டு.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
asiya omar.

Vijiskitchencreations said...

பொஙல் வாழ்த்துக்கள். எல்லா பொங்கல் ரெசிப்பிஸ்ஸும் சூப்பர்.
இன்றைக்கு உங்க குறிப்பு படி தான் பால் பொங்கல் செய்கிறேன். நன்றி.

Kanchana Radhakrishnan said...

//இன்றைக்கு உங்க குறிப்பு படி தான் பால் பொங்கல் செய்கிறேன்.///
நன்றி Viji.

Arundathi said...

your photo seems to have been used here http://malli.in/recipes_detail.php?recid=60&cat_name=cuisid&cat_id=18

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...