தேவையானவை:
கடலைப் பருப்பு 1 1/2 கப்
உளுத்தம்பருப்பு 1/2 கப்
சிவப்பு மிளகாய் 1 1/2 கப்
கொப்பரை 1 1/2 கப் (துண்டுகள்)
புளி ஒரு எலுமிச்சை அளவு
வெல்லம் 1/4 கப் (பொடித்தது)
பெருங்காயம் 1 துண்டு
கடுகு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து
உப்பு,எண்ணைய் தேவையானது
செய்முறை:
கடலைப் பருப்பையும் உளுத்தம்பருப்பையும் எண்ணையில் பொன்னிறமாக வறுக்கவேண்டும்.
சிவப்பு மிளகாயை சிறிது எண்ணையில் தனியாக வறுக்கவேண்டும்.
கொப்பரையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சிறிது எண்ணைய் சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுக்கவேண்டும்.
புளி,உப்பு,பெருங்காயம் மூன்றையும் தனித்தனியே வறுத்து எடுக்கவேண்டும்.
-----
மிக்சியில் அரைக்கும்போது கொப்பரையை முதலில் கரகரப்பாக அரைத்து வைக்கவும்.
அடுத்து கடலைப் பருப்பு,உளுத்தம்பருப்பு,புளி,உப்பு எல்லாவற்றையும் அரைக்கவேண்டும்.
சிவப்பு மிளகாயை தனியே நைசாக அரைக்கவேண்டும்.
கடைசியில் எல்லாவற்றையும் வெல்லத்தோடு சேர்த்து ஒரு சுற்று சுற்றவேண்டும்.
அரைத்த இட்லிப் பொடியை ஒரு அகண்ட பாத்திரத்தில் கொட்டி கடுகு கறிவேப்பிலை தாளித்து
நன்றாக கலந்து எடுத்து வைக்கவேண்டும்.
16 comments:
vellam, koparai saertha podi...puthumaiyaa irukku...
கலக்கலான படைப்பு
http://kavikilavan.blogspot.com/
my fav idly podi, adding tamarind is new to me, thanks for sharing
நன்றி Revathi.
loved the addition of Kopras and jaggery -good one !
வருகைக்கு நன்றி யாதவன் .
Thanks Krishnaveni.
இட்லி பொடியில் தேங்காய் சேர்ப்பதால் நிறைய நாட்கள் வருமா...
புளி சேர்ப்பது புதுசு...புளியினை சுட வேண்டுமா அல்லது கடாயில் போட்டி வறுத்தால் போதுமா..
கண்டிப்பாக செய்து பார்க்க வேண்டும்...
தேங்காய் கூடாது.கொப்பரையை உபயோகப்படுத்தினால் கெடாது.புளியை வெறும் வாணலியில் நன்கு வறுக்கவேண்டும்.
இந்த பொடி மிகவும் ருசியாக இருக்கும்.வருகைக்கு நன்றி Geetha
வருகைக்கு நன்றி Priya Sreeram.
இந்த இட்லி பொடி
இந்திர லோக
இன்பப் பொடி
இதய நல்லெண்ணை அதில்
இசைய, சுடச்சுட
இட்லி நாலு
எங்கே கிடைக்கும் ?
சுப்பு தாத்தா.
http://vazhvuneri.blogspot.com
//sury said...
இந்த இட்லி பொடி
இந்திர லோக
இன்பப் பொடி
இதய நல்லெண்ணை அதில்
இசைய, சுடச்சுட
இட்லி நாலு
எங்கே கிடைக்கும் ?
சுப்பு தாத்தா.//
:)))
arumaiyaana idli podi
வருகைக்கு நன்றி Jaleela.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இதை தவனப்பொடின்னு சொல்லுவோம்.
வருகைக்கு நன்றி அமைதிச்சாரல்.
Post a Comment