Wednesday, January 5, 2011

அங்காயப் பொடி

தேவையானவை:

வேப்பம்பூ 1/2 கப்  தனியா 1/2 கப்

மிளகு 2 டேபிள்ஸ்பூன்

சீரகம் 2 டேபிள்ஸ்பூன்

சுண்டைக்காய் வற்றல் 15

மிளகாய் வற்றல் 4

பெருங்காயம் 1 துண்டு

கறிவேப்பிலை 1/2 கப்

சுக்குப்பொடி 2 டீஸ்பூன்

கடுகு 1/2 டீஸ்பூன்

உப்பு,எண்ணைய் தேவையானது



செய்முறை:


ஒரு கடாயை எடுத்துக்கொண்டு அதில் வேப்பம்பூவை கருஞ்சிவப்பாக வறுக்கவேண்டும்.

தனியா,மிளகு,சீரகம் மூன்றையும் சிறிது எண்ணையில் நல்ல சிவப்பாக வறுக்கவேண்டும்.

சுண்டைக்காய் வற்றலை எண்ணையில் வறுக்காமல் பொறிக்கவேண்டும்.

மிளகாய் வற்றல்,பெருங்காயம்,கறிவேப்பிலை மூன்றையும் வறுக்கவேண்டும்.

சுக்கை சிறு சிறு துண்டுகளாக்கி பொடி செய்யலாம்.(அல்லது கடையில் சுக்குப்பொடியே கிடைக்கும்.அதை வாங்கிக் கொள்ளவும்)

கடுகையும் உப்பையும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுக்கவேண்டும்.

எல்லாவற்றையும் ஒன்றாக மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவேண்டும்.

சாதத்தில் முதலில் நல்லெண்ணைய் சேர்த்து பிசறி பின் இந்த பொடியை சேர்த்து சாப்பிடவேண்டும்.

ஜீரணத்திற்கு நல்லது.

10 comments:

GEETHA ACHAL said...

மிகவும் அருமையான குறிப்பு..பகிர்வுக்கு நன்றி...

பொன் மாலை பொழுது said...

எற்கனவே நல்ல ஜீரண சக்தியுடன் சாப்பிட்டு சாப்பிட்டு , இந்தியன் ஆயில் டீசல் ட்ரம் போலத்தான் இருக்கிறார்கள். இதில் வேறு ஜீரண சக்திக்கு மருந்தா. :)))))

Priya Sreeram said...

very nice post--thanks for sharing !

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி
புவனேஸ்வரி ராமநாதன்

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Geetha.

Kanchana Radhakrishnan said...

// கக்கு - மாணிக்கம் said...
எற்கனவே நல்ல ஜீரண சக்தியுடன் சாப்பிட்டு சாப்பிட்டு , இந்தியன் ஆயில் டீசல் ட்ரம் போலத்தான் இருக்கிறார்கள். இதில் வேறு ஜீரண சக்திக்கு மருந்தா./////

-)))

Asiya Omar said...

அருமைங்க.பகிர்வுக்கு நன்றி.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி asiya omar.

Krishnaveni said...

wow, super recipe, thanks for sharing, happy new year to you and your family

Kanchana Radhakrishnan said...

// Krishnaveni said...
wow, super recipe, thanks for sharing, happy new year to you and your family //

thanks a lot...wish you the same.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...